பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1了予 இராச ராச சேதுபதி

நெறியில் - அரசுக்குரிய நீதிநெறி முறைமையில்; மாணிக்கம் - ானிக்க மணிபோல் சிறந்தவன்; அண்ணல் - பெரியோன்; செறியத். திகழ் அன்பு - நெருங்கி விளங்கும் அன்பு, பொறி - இயந்திரம்: கோட்டை - மதில் குழ்ந்த காப்பிடம்; இயந்திரம் முதலியவற்றால் சிறந்துள்ள நிலை அறியாது கோட்டையை வெளியார் கொள்ள விடுத் தனையே என்பது வெளிப்படை; பொறியில் சிறந்தது - ஐம்பொறிகளி லும் சிறப்புநிலை உற்றது கண்; கண் உள்ளாய் - கண்ணைக் கையிட மாகப் பற்றியுள்ளாய்: கோடு - தந்தம், முலை; கோட்டை - முலையை : புறம்போக்கினை - வெளியே தெரியும்படி விடுத்தாய்.

228

கைக் குஞ் சரமம் பகைவேர் தர் கொள் எ க் களிற்றினை யு கைக்குஞ் சரப மெனும்ராச ராசமன் கார்வரை வாய்க் கைக்குஞ் சரமெதிர் கின்றது கண்டும்வன் கண்ணரைப்போற் கை க் குஞ் சரமிருங் தெய்யாத தென் கொல் கனங்குழையே.

கைக்கும் சரமம் - வருத்தம் செய்யும் இறப்பு; களிறு - ஆண்யானை : உகைக்கும் செலுத்தும்; சரபம் - சிங்கத்தையும் வெல்லும் ஆற்றல் படைத்த பெருவில்ங்கு கார் - மேகம், கைக்குஞ்சரம் - கையையுடைய யானை; முலை. யானை எதிர்த்து வருதலைப் பார்த்தும் வீரரைப் போலக் கையின்கண் அம்பு இருந்தும் அதனை விடாதது என்ன காரணம் என்பது வெளிப்படை, வன்கண்ணர் - அஞ்சாமையுடைய வீரர்: கைக்கும் சரம் இருந்தும் - கையிடத்தே அம்பு போன்ற கண் இருந்தும்: எய்யாதது- அறியாதது; அதாவது கண்ணை மூடிய தன்மை.

229

அற்காய் கதிரொளி யாற்கோயின் முற்று மலங்கரித்தோன் மற்காய் புயத்துச் சமரகோ லாகல மன்னன் வழி யிற்காய மெய்திய சீராச ராச னிருங்கிரியாய் கற்கா யெனவைத்துங் கண்ணறி வில்லை கலையில்லையே.

அல் காய் கதிர் - இருளைச் சினந்து ஒட்டும் சூரியன்: கோயில் - அரண்மனை ; மற்காய்புயம் - மல்லரை வருத்தும் தோள்; சமர கோலா கலன் - போரையே விநோதமா கக் கொ ண்டிருப்பவன், போர் விருப்ப முடையவன்; காயம் - நிலைபேறு; கற்கு ஆய் - கல்விக்குத் தாய் ; கண்எைறிவு - கண்னுகின்ற அறிவு: கலை இல்லை - ஒளி இல்லை.