பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 4 இராசராச சேதுபதி

மதுரையில் தோற்றுவிக்கப்பெற்ற தமிழ்ச்சங்கம்; இதனை நான்காம் தமிழ்ச்சங்கம் என்பர். சயிலமின்னா ர் - மலையில் உள்ள மகளிர்; நங்கைக்கு - பெண்களுக்கு; பெருமா நலம் நண்ணினர் - மிகுந்த செல் வம் பெற்றவரா யிருப்பவர்; தங்கைக்கு - தம்முடைய தங்கைக்கு; அயலவ ரா.கி நின்றார் - மாற்றார் போல நின்றார். எல்லாப் பெண்களுக்கும் இனியவராயுள்ளவர் தம் தங்கையுடன் மாறுபட்டிருத்தலால் முறையன்று என்றார். நம் கைக்கு இனியவராய் - நாம் புணர்வதற்கு இனியவராய் : பெருமாநலம் - பெரிய யானைத் தந்தம் போன்ற முலைவளம்; தம் கைக் கயல வராகி நின்றார் - தம் கையிடத்தே கயல்மீன்போன்ற கண்ணைக் கொண்டவராய் நின்றார்.

2험: 2

வார்ண மெட்டும் பொறையாற்றத் தன் புயம் வையம்வைத்துத் த.ரணஞ் செய்கின்ற சீராச ராசன் சயிலமின்னே

ஆரணங் கூறிய பார்ப்பா ரிலாம லவணியிலே பூரண கும்பங் தருவதுண் டோபொலம் பூங்கொடியே.

வாரணம் எட்டும் - பூமியைச் சுமக்கின்ற திக்கானைகள் எட்டும்; பொறை - பாரம்; பொறையாற்ற - சுமையை இறக்கி இளைப்பாறும் படி: புயம் - தோள்; வையம் - உலகம்; உத்தாரணம் - உயர்த்துதல்; ஆரணம் - வேதம்; அவனி - பூமி, வேதம் ஒதும் பார்ப்பார் இலாமல் பூரணகும்பம் தருவது வழக்கமில்லை என்பது வெளிப்படை, பூரண கும்பம் - மாவிலை தருப்பை முதலியவற்றால் அலங்கரித்து நீர் நிறைக் கப்பட்டுள்ள குடம்; பெரியோர்களை வரவேற்கும் போது பூரண கும்பம் தந்து வரவேற்பர். ஆர் அணங்கு ஊறிய பார்ப்பார் - மிக்க துன்பம் விளைவிப்பதில் தேர்ந்த கண்; பார்ப்பார் இலாமல் - கண் இல்லாமல்; அதாவது கண்ணை மறைத்தமை குறித்தபடியாம். பூரண கும்பம் - நிறை குடம் போன்ற முலை.

233

மணிமானு மேனியம் மான் மரு கன்குற வள்ளிமுனங் கணிமா மரமென நின்றன் றிருவடி காதலொடு பணிமா கிலமன்னன் சீராச ராசன் பருப்பதத்தீர் அணிமா வெளிப்பட்ட துங்க ணிருத்தி யமர்கையொடே.

மணி - மாணிக்கம், செம்மணி; மா னும் - ஒக்கும்; மான்மருகன் . திருமால் மருமகனாகிய முருகன்; முனம் - முன்னம்; கனிம