பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறை க் கோவை 115

வேங்கையாகிய பெருமரம்; காதலொடு - அன்போடு, பத்தியோடு: அணிமா - எண்வகைச் சித்திகளுள் ஒன்று; அனுப்போல துண்மை யாகுதல். இருத்தி - சித்தி; சித்தி பொருந்துதலுடன் அணிமா என்னும் சித்தியின் வகையும் வெளிப்பட்டது என்பது மேற்போக்கான பொருள். அணி மா - அழகிய யானை, அழகிய முலை; உம் கண் இருத்தி அமர் கையொடே - உமது கண்ணை இறுக்கிப் பொதிந்துள்ள கைகளோடே.

오한다

கருப்பைப் புகாம லடியரைக் காக்கின்ற கந்தனடி விருப்பை மருத வியன் செம்பி காடன் விழுமியர்சூழ் இருப்பை விடாதொளிர் சீராச ராச னெழில்வரையீர் பொருப்பை புருவு மென வோசெவ் வேலைப் புதைப்பதுவே.

கருப்பை - கருவளரும் பை, கருப்பைப் புகாமல் - பிறவியை அடை யாமல்; கந்தன் - முருகன்; மறாத - மறவாத வியன் செம்பி நாடன் - மிக விரிந்துபரந்த செம்பி நாட்டுக்கு உரியவன்; விழுமியர் சூழ் இருப்புசிறந்த அறிவு படைத்த புலவர்கள் சுற்றிலும் இருக்கும்படி நடுநாயகமாக வீற்றிருக்கும் இருக்கை; ஒளிர்தல் - விளங்குதல்; பொருப்பு - மலை; உருவும் - ஊடுருவிச்செல்லும் . மலையை ஊடுருவிச் செல்லும் என்பதைக் கருதியோ செந்நிறம் படைத்த வேலாயுதத்தை ஒளித்து வைப்பது என் பது வெளிப்படை. முருகன் கிரவுஞ்ச மலைமீது வேல்வீசிய நிகழ்ச்சியை இது நினைவூட்டுகிறது. பொருப்பு - மலை, முலை: செவ் வேல் - சிவந்து காணும் வேலாயுதம்; செவ்வரி படர்ந்த வேல்போன்ற கண்; வேலைப் புதைப்பது - கண்ணை மறைப்பது.

285

புத்தி கிலாய புலவோ ரவைக்கம் புலியனையான் பத்தினி யாய வட் குக் கடற் சேதுசெய் பண்ணவனே கத்தினி யானெனுஞ் சீராச ராச னளிர்வரை வாய்ச், சித்தினி யாயுன் 2ன யென்பேன் கரிமா தெரித்தலினே.

புத்தி நிலாய - அறிவு நிலைபெற்ற; அம்புலி - சந்திரன், பத்தினி - கற்பின் திலகமாகிய சீதாப்பிராட்டி; சேது - திருவணை; சேது செய் பண்ணவன் - இராமன், நத்து இனியான் - விரும்புகின்ற இனிய குணம் படைத்தவன்; கரிமா - எண்வகைச் சித்திகளில் ஒன்று: மிகக் கண்மாகை;