பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 இராச ராச சேதுபதி

கரிமா என்னும் சித்தியைக் காட்டுதலால் உன்னைச் சித்து செய்வதில் இன்பம் காண்பாய் என்று சொல்லுவன் என்பது வெளிப்படை. சித்தினிகண்கட்டு வித்தை வல்லவள்; கண்ணை மறைத்தமை கருதி இவ்வாறு கூறினன்; சித்தினி என்பதற்குச் சிறந்த பெண் என்றும் உரைக்கலாம். கரிமா தெரித்தல் - யானைத் தந்தம் போன்ற முலைகளை வெளிப் படுத்தல்.

28 (3

மலையேற்ற தோளும் மழையேற்ற கையும் மகுடமன்னர் த2லயேற்ற தாளுங் திகழ்ராச ராசன் சயிலமின்னே கொலேயேற்றி வைத்த மகரத்தை யுேன் கைக் கொண் டதையே உ2லயேற்றி யென்கைக் குதவ கின் றயி... துயர் விருக்தே.

ஏற்ற - மாறுகொண்ட, ஒத்த , பொருந்திய மழை ஏற்ற கை மழையின் தன்மை பெற்ற கொடைக்கை, மகுடம் - கிரீடம் தலை எற்ற - த ைல .ெ ப ரு ந் தி ய தலைகளைத் தாங்கிய முடிமன்னர் இராசராசனின் காலில் விழுந்து வணங்குதலால் அவர்களின் தலையை ஏற்றதாயிற்று. கொலை ஏற்றிவைத்த மகரம் - கொல்லப்பெற்ற மீன்: உலை ஏற்றி - கொதிக்கும் நீரில் இட்டு; உயர்விருந்து - சிறந்த விருந்து உணவாகும். மகரம் - மீன் போன்ற கண்; கொலை எற்றி வைத்த மகரத்தை நீ உன் கைக்கொண்டு - வருத்தும் தன்மை படைத்த மீன் போன்ற கண்ணை உன் கையிடத்தே பெற்றுள்ளாய்; அதையே உலை ஏற்றி - அம் மகரத்துடன் உலை என்பசைச் சேர்த்து, ம் - உலை முலை. முலையை என் கைக்கு உதவும் பொருட்டு நிற்கின்றாய்.

2 7

அருமைத் தமிழர சாயுள்ள தன்மர பாதரிக்கப் பெருமைப் புயல் சண் முகாாக காதனைப் பெற்றுகலக் தருமெய்க்க னிற்பவன் சீராச ராசன் றடவரை வாய் இருமைக்க ணின்பகல் கீர்கெஞ் சினிற்கோ டிருப்பதினே.

அருமை - கிட்டுதற்கு அரிய சிறப்பு: தமிழரசு - சேதுபதிகளின் அரசு தமிழரசு; தமிழ் மன்னன் ஆளுதலினால் தமிழரசாயிற்று. மரபு - குலம்; ஆ த ரி க் க - வளர்க்க; சண்முகநாகநாதன் - இராசராச சேதுபதியின் புதல்வர்; நலம் - நன்மை; மெய் - உண்மை; இருமை - இம்மை மறுமை. நெஞ்சில் கோடு இருப்பதினே - உமது நெஞ்சில் நடுநிலை இல்லாததால்.