பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 இராச ராச சேதுபதி

புறுதல் உயர்பு இல்லை - வறுமையால் வாடி அலைதலைச் செய்வது உயர்வான செயலன்று. உள்ள தனம் விட்டு - மார் பில் உள்ள முலைகளை விடுத்து: அலை - கடல், கண் ; அலை கையுறல் - கடல் போன்ற கண் களைக் கையால் பற்றியிருத்தல்.

25 :

பொய்க்கூடு செல்லு கிலாகன் னெறியிற் புவிப்புரப்போன் கைக்கூடு நீள்கொடைச் சீராச ராசன் கன் வரைவாய் திக்கூடு செல்லத் தெரியாது கண்கள் திசைத்தலின்ை முக்கூட 2லயளித் தீருங்கள் கூடலை முன்னுமெற்கே.

பொய்க்கு ஊடு செல்லுகிலா - பொய்யின் இடையிலே செல்லுதல் இல்லாத, நன்னெறி - நல்வழி; புவிபுரப்போன் - உலகைக் காப்போ ன்: கைக்கூடு நீள் கொடை - கையில் .ெ ப ா ரு ந் தி ய பெருங்கொடை, திக்கூடு - சரியான திசையில், வழியில்; திசைத்தலினால் - மயங்குதலி னால், முக்கூடல் - முக்கூடல் என்னும் ஊர்; கூடல் - மதுரை; கூடல் நகர் செல்லக்கருதும் எனக்கு முக்கூடல் ஊருக்கு வழி காட்டினர் என்பது வெளிப்படை. திக்கு ஊடு செல்லத் தெரியாது - திக்குடனாய ஆகாயம் போன்ற இடை நடுவே இருப்பது தெரியாது. கண்கள் திசைத்தலினால்கண்கள் கையிடமாக அடங்கியிருத்தலால், உங்கள் கூடலை முன்னும் எற்கு - உங்கள் புணர்ச்சியை கருதும் எனக்கு முக் கூட லை - மு.வுடன் கூட லை என்றது முலை.

254

மென்றினைக் காட்டிற் கணியாகி வள்ளியை வேட்டவன் சீர் நன்றினைக் காட்டி மகிழ்ராச ராச கரேந்த்ரன் வரைக் கன்றினைக் காட்டிய கையிர் தரிசனங் க்ாட்டுவதிற் குன்றினைக் காட்டியக் கந்தனே மாற்றல் குறையுமக்கே.

மென்தினைக்காட்டில் - மெல்லிய தினைவிளையும் புனத்தில் கரிை வேங்கைமரம்; வேட்டவன் - மணந்தவன்; வள்ளியை வேட்டவன் - முருகன்; சிர் நன்றினைக் காட்டி - முருகனின் புகழைப் பெரிதும் பேசி: நரேந்த்ரன் - மக்களின் தலைவன்; கன்று - வளை: கன்றினைக் காட்டிய கை - வளையல் அணிந்த கை: த ரிசன ம் காட்டுவது மூர்த்தியைப் பார்க்குமாறு செய்வது . குன்றினைக் காட்டி அக் கந்தனை மாற்றல்