பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இராசராச சேதுபதி

257

நீர்வள நாடு புரந்த வளவர் கெடுந்துணையாய்ப் போர்பல் வென்ற சிலமற வோரிற் புலியனையான் தேர்வலஞ் செய்ய வருராச ராசன் றிருவரையாய்ப் பார்வலுள் ளாரிவர் பார்வல்கொள் ளாரென்ன பண்புடைத்தே.

நீர்வள நாடு - புனல் நாடா ம் சோழநாடு; வளவர் - சோழர்; நெடுந்துணை - பெரிய துணைவலி; பார் வலுள்ளார் - பூமியில் மிக வலுவுள்ளவராகிய இவர்; பார்வல் கொள்ளார் - பிறரைக் கண்ப்ார்த்தல் செய்யார், அதாவது பிறரை ஆதரியார். இது என்ன பண்புடைத்து - இது எத்தகைய பண்புடைமையாகும். பண்புடைமை ஆகாது என்பதாம். பார்வல் உள்ளார் - பார்த்தலை நினையார், கண்ணை மறைத்துப் பாராது நின்றனர்; பார் வல் கொள்ளார் - பருத்த சூதுகாய் போன்ற முலைகளை மறைத்துக்கொள்ளாது விடுத்துள்ளார். -

258

கத்தலை வைத்த தடஞ் சூழ் முகவை நகர்க்கதிபன் மெய்த்தலை வைத்த புகழ்ராச ராசமன் வெற்பனையாய் முத்தலை வைத்தலை மட்டு மெமக்கு முனங்தெரித்தாய் அத்தலை வைத்த பெருவேலை யென்கொ லடைத்ததுவே.

555 அலை வைத்த - நத்தையை அலைகளிடத்தே கொண்ட ந த் த ைல வைத்த - விரும்புதலைக்கொண்ட என்றும் ஆம்; தடம் - தடாகம்; மெய்த்தலை வைத்த புகழ் - உண்மையின்பாற்பட்ட புகழ்; முத்து அலை வைத்தலை மட்டும் எமக்கு முனம் தெரித்தாய் - முத்து அலை களால் கொண்டு வந்து வைத்தலை மட்டும் எனக்குக் காட்டினாய் : அத்தலை வைத்த பெருவேலை என்கொல் அடைத்தது - அவ்விடத்தே பொருந்திய கடலை அடைத்தது ஏன். முத் தலைவைத்த லை முவை முதலிலே பெற்ற ல்ை - முலை; முலைமட்டும் முன்பு எனக்குத் தெரியக் காட்டினாய். அத்தலை வைத்த பெருவேலை - அந்தத் தலையின்கண்: கொண்ட பெரிய கடல் போன்ற கண்களை.

25인

போர்ப்பா லருச்சுன னுள்ளந் தெளிந்து பொரவிசைத்த தேர்ப்பாகன் கீதை தெளிராச ராசன் றிருவரைவாய் நேர்ப்பா கத்தம் மொத்த வரையடைந்து கிலேக்கொளினும்

பார்ப்பாரைப் பார்ப்பார்கள் பாராரைப் பாராளிப் பாரிடத்தே .