பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேது சமத்தான மகாவித்துவான் ரா. இராகவையங்கார்

(1870 – 1946)

மு. சண்முகம் பிள்ளை

தமிழுலகில் மகாவித்துவான் என்றால் திருவாவடுதுறை ஆதீன மகா வித்துவான் மீட்ைசி சுந்தரம்பிள்ளை அவர்களின் திருப்பெயரே முன் னிற்கும். அதுபோலவே சேதுசமத்தான மகாவித்துவான் என்றால் ரா. இராகவையங்கார் நம் எண்ணத்தில் முற்படுவார். எத்தனையோ மகாவித்துவான்கள் சேது வேந்தர் அவைய்ை அலங்கரித்தபோதிலும் ரா. இராகவையங்கார் அம் மகாவித்துவான்களுள்ளே முன்னணியில் வந்து நிற்கிருர்.

மகா வித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் 20-9-1870 - ல் தோன்றினார். இவர் பிறந்த ஊர் சிவகங்கைச் சீமையைச் சார்ந்த தென்னவரா யன் புதுக்கோட்டை. இவருடைய தந்தையார் இரா LDרח துஜையங்கார்; தாயார் பதுமாசனி அம்மையார். இவர் பிறந்த கோத் திரம் நைத்துருவகாசிய கோத்திரம் ஆகும்.

இளமையில் ஐந்தாம் வயதிலேயே தம் தந்தையார்ை இழ்ந்தார் இராகவையங்கார். இவருடைய தாய்மா மஞர்'சதாவதான்ம் முத்துசாமி ஐயங்கார் இராமநாதபுரம் சமத்தானத்தில் அரசவைப் புலவராய் அந் நாளில் சிறப்புடன் விளங்கினார். இவர் தமிழிலும். வடமொழியிலும், கன்னடம் முதலிய பிறமொழிகளிலும் வல்லவர். சதாவதானி என்பது இவர்தம் கல்வியின் மிகுசிறப்பால் பெற்ற விருதுப் பெயராகும். இத்தகு பெருமை பல கொண்ட தாய்மாமனாரின் ஆதரவில் இராகவையங்கார் இராமநாதபுரத்தில் கல்வி பயின்றார். மெட்ரிக்குலேசன் வரை பள்ளிக் கல்வி பெற்றதோடு தம் அம்மானிடமும் சமத்தானப் புலவர்களிடத்தும் தமிழும் வடமொழியும் பயின்றார். இளமையிலேயே கூரிய அறிவும் கவி பாடும் திறமையும் பெற்று இவர் விளங்கினார்.

இராகவையங்கார் தம் 18 ஆம் அகவையில்ேயே மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராய்ப் பணிபுரியத் தொடங்கினார். ஜானகி அம்மாளை வாழ்க்கைத் துணையாகப் பெற்றார். திருச்சியில் உள்ள சேவுையங்கார் பள்ளியிலும் சிலகாலம் இவர் தமிழாசிரியராக இருந்தார்.