பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறை க் கோவை 133

27B

அடலோகை மேய மறவோர் குடிக்கர சாகியிவண் இடலோகை மேவிய பாற்கரற் குப்புவி யேந்தவர் து பமிடலோகை மிக்கவன் சீராச ராசன் மிளிர்வரைவாய் கடலோகை மேவின போதே மலையிடர் கண்டதென்னே.

அடல் ஒகை மேய மறவர் - பகைவரைக்கொல்லுதலில் மகிழ்ச்சி மிக்க வீரர்; அடலோ கைமேய மறவர் எனின் வலிமை கைவரப்பெற்ற வீரர் என்றாம். இவண் - இவ்வுலகில்; இடல் - கொடுத்தல்; ஒகை - உவகை மகிழ்ச்சி; மிளிர்வரை - ஒளிபடைத்த மலை; கடல் ஒகை மேவின போது - கடல் பெருக்கெடுத்துப் பொங்கிய சமயத்தில்; மலை இடர் கண்டது என்னே - மலை துன்புற்றது என்ன வியப்பு. கடலோ கை மேவி ன போதே - கடல் போன்ற கண் கையில் பொருந்திய போது, கண்ணை மறைத்த போது; மலை - முலை; இடர் கண்டது - ஒன்றுடன் ஒன்று மோதித் துன்புற்றது.

274

ஏற்றினைப் போன்றிகல் வாரண மேறி யெதிர்ந்த பகைத் துாற்றினை வெட்டிய கோன்றள வாய்வழித் தோன்றல்வையை யாற்றினைப் பெற்றவன் சீராச ராச னணி வரையீர் கூற்றினை மாற்றினர் வல்வம்ப ரென்னுங் குவலயமே.

ஏறு - ஆண்சிங்கம்; இகல் வாரணம் - போர் செய்தலில் வல்ல யானை; மாறுபாடு கொண்ட யானை, துாறு - புதர்; பகைத்துாறு - பகை வராகிய புதர்க் காடு; வெட்டிய - அழித்த; தளவாய் - வீரன், வையை வைகை; கூற்று - பேச்சு: கண்; வல் வம்பர் - வல்வழக்கிடுவதில் தேர்ந்தவர்; குவலயம் - பூமி, உலகத்தார்; கூற்றினை மாற்றினர் யமன் போல் வருத்தும் கண்ணைக் கையால் மறைத்தார்; வல்வம்பர் - வல்லுக் காய் போன்ற முலைகளுடன் கச்சினையும் உடை யவர்; வம்பு

கி Fது .

275

எதனுை வெல்லப் படாவிகல் வேந்த ரிருங்குடியிற் புதனுக விஞ்சிய சீராச ராசன் புனல்வரைவாய் மத னனை முற்று மிருள் வந்த போதில் வருமல்லது மத னனை மேவுகை யாலிருள் போர்ததென் மாதரசே.