பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 இராசராச சேதுபதி

பயன்கிட்டும்; குறையே - குறையுடையதே, குற்றமே. கோவானவர் - அரசர்; மாவானவர் - சிறந்த தேவர்; அரசனில்லாமல் தேவர் காரியம்

சிறப்புற நடவாது என்பது கருத்து.

298

மோந்தக மண்டு மதுலா ரளிகுல மொய்த்தமுல்லை யேந்தக லந்திக முஞ்சேது வேந்த னெதிர்ந்தவர்க்கு காந்தக மேந்திய சீராச ராச னளிர்வரையீர் காந்தக கல்கலி ரெத்தனை யுக்தன கல்கியென்னே.

மோந்து - முகர்ந்து, மண்டும் - நிறையும், நெருங்கும்; மது ஆர் அளிகுலம் - தேனை உண்ணும் வண்டுக் கூட்டம்; எந்த கலம் - பரந்த மார்பு; எதிர்ந்தவர் - போரில் எதிர்த்து வந்தவர்; நாம் தக நல்கலிர் - நாங்கள் தகுதிபெறும் அளவு தந்தீரில்லை; எத்தனையும் தனம் நல்கி என்னே - எவ்வளவு செல்வம் கொடுத்தும் என்ன பயன் என்பதாம். நாந்தகம் வாள்; நா ந் த க ம் நல்கலிர் - வாள் போன்ற கண்ணைத் தந்தீரில்லை; தனம் - முலை.

299

ஏருறு தண்மயி லாபுரி காதனுக் கெக்ககுடிப் பேருறு முர்ாகல்கு சீராச ராசன் பெருங்கிரியார் சீருறு கோகிலர் தாழிசை யார்பல் திகழ்வெள்ளையார் ஆர்கலி யார்கையி ர்ைவஞ்சி யாரக வல்லுளரே.

ஏர் உறு அழகு பொருந்திய, ம யி லா புரி நா த ன் - மயிலாபுரி இறைவன்; எக்ககுடி - எக்ககுடி எ ன் னு ம் ஊர்; பேர் உறும் ஊர் - புகழ் மிகும் ஊர்: சீர் உறு கோகிலம் தாழ் இசையார் - சிறப்புடைய குயில் போலும் தாழ்ந்த பேச்சுடைய பெண்டிர்; பல்திகழ் வெள்ளையார். பல் ஒளிமிக்க முல்லைமலர் போன்றவர்; ஆர்கலி ஆர் கையினார் - துன்பத்தால் விழுங்கப் பெற்றவர்; வஞ்சியார் - வஞ்சனை புரியார்: அகவல் உளர் - மனவன்மை உடையவர்; ஆர்கலி ஆர் கையினார் . கடல் போன்ற கண் பொருந்திய கையையுடையவர்; வஞ்சியார் - வஞ்சிக்கொடி போன்றவர்; அகவல் உளர் - மார்பிடத்தே சூதுபோன்ற முலையினையுடையா #. தாழிசை, வெள்ளை, கலி, வஞ்சி, அகவல் என்னும் பாலின் பெயர்கள் இதில் வெளிப்படுதலும் நோக்கத்தகும்.