பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 50 இராசராச சேதுபதி

இம்பர் - இவ்வுலகம்; நிலமன்னர் - நாட்டுக்குரிய அரசர், நரேந் திரன் - மக்கள் தலைவன், அரசன்; நம்பல் - விரும்பல்; நம்பிக்கை; உம் பல் ஒளிசெயவோ கரு வேற்கண் கை ஒன்றினிர் - உம்முடைய பல் லினை வெள்ளிபோற் செய்யக் கருவேல மரத்தின்கண் கை பொருந் தினர். ஆலும் வேலும் பல்லுக்குறுதி' என்பது பழமொழி. உம்பல் - யானை, முலை; கருவேல்கண் - கருமைபொருந்திய வேல் போன்ற

& GoTT.

312

வெறுஞ்சுவை யில்லாக் கவிக்குரு காதவன் மெய்ப்புலமை கறுஞ்சுவை கண்டு தரதமர் தேர்ந்து கலாநிதியம் பெறுஞ்சுக மெய்தத் தருராச ராசன் பெரிதுடைய குறிஞ்சியைக் காட்டினை கெய்தலைக் காட்டிலை கோமளமே.

சுவை இல்லா வெறுங்கவி என்க; வெறுங்கவி-பொருட்சிறப்பில்லாத வெள்ளைககவி; உருகாதவன் - மனம் நெகிழாதவன்; மெய்ப்புலமை - உண்மையான அறிவுத்திறன்; நறுஞ்சுவை - இனிய சுவை; தரதமம் - உ ய ர் வு தாழ்வு; நிதியம் - செல்வம்: சுகம் எய்த இன்பங்களை அடைய குறிஞ்சி குறிஞ்சி நிலம்; நெய்தல் - நெய்தல் நிலம்; குறிஞ்சி நிலத்தைச் காட்டியவர் நெய்தல் நிலத்தைக் காட்டவில்லை என்பது வெளிப்படை. குறிஞ்சி - மலை, முலை; நெய்தல் - நெய்தல் மலர் போன்ற கண்; கோமளம் - அழகு, அழகுடைய பெண்.

B13

கொடைக்கரங்காட்டிய பாற்கர வேந்தன் கொழுந்தருமத் திடைப்புவ ணிக்கண்வர் தோன்றேவை காவல னின்றமிழ்ப்பா கடைக்கம ரும்புகழ்ச் சீராச ராச னளிர்வரைவாய்க் கடற்கயல் காட்டலிர் நீரானை காட்டினிர் காணுறவே.

கரம் - கை; கொழுந்தருமம் - மிகுந்த தருமம்; புவனி - பூமி, இன் தமிழ்ப்பா நடைக்கு அமரும் புகழ் - புலவர் பாடும் பாக்கொண்ட பெரும் புகழ்; கடற்கயல் - கடலிலுள்ள கயல்மீன்; நீரானை - நீரில் வாழும் யானை, கடற்கயல் - கடல்போன்றதும் கயல்மீன் போன்றதும் ஆகிய கண், கானுற காணும்படி, நீர் ஆனை காட்டினிர் காண் உறவே யான் பொருந்தும்படி நீர் யானை போன்ற முலைகளை வெளிப் படுத்தினிர் என்றவாறாம்.