பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. சண்முகம் பிள்ளை X |

நலனைப் பலரும் வியக்கும் வண்ணம் வெளிப்படுத்தியும் வந்தார். இத்தகு கல்வியனுபவம் பிற்காலத்தில் அவருக்குப் பெரியதோர் துணை

யாய் அமைந்தது.

- சேதுசமத்தான வித்துவானாக இவர்கள் விளங்கிய காலத்தில்தான் சுவாமி விவேகானந்தர் அங்கு வந்து சேதுபதிகளின் ஆதரவில் மேல்நாடு களுக்குச் சென்று திரும்பினார். சுவாமி விவேகானந்தர் போன்ற பெ யார்களின் பழக்கம் இவருக்கு ஏற்பட ஒருவாய்ப்பாயிறறு. சேது பதியை நாடிவந்து பொருளுதவி பெறற புலவர் பெருமக்கள் பலராவர். அப் புலவர்களுடனும் கலந்து பழகும் வாய்ப்பும் இவருக்கு நேர்ந்தது.

பாஸ்கர சேதுபதிகளின் ஆதரவில் பாண்டித்துரைத் தேவரவர்களின் முயற்சியால் மதுரை மாநகரில் தமிழ்ச் சங்கம் 1901 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாள் நிறுவப் பெற்றது. இச் சங்கத்தை நிறுவும் பணியில் இராகவையங்கார் தேவர் அவர்களுக்குப் பெருந்துணையாயிருந் தார். நான்காம் தமிழ்ச் சங்கம் என இது போற்றப்பெற்றது. சங்கத்தி லிருந்து தமிழ்ப்பணி புரியத் தம் அவைப் பெரும்புலவரான இராக வையங்காரைச் சேதுபதியவர்கள் அனுப்பி வைத்தார்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நூற்பதிப்பு, ஆராய்ச்சித் துறைகளின் தலைவராய் இராகவையங்கார் அவர்கள் விளங்கினார்கள். டதுரைத் தமிழ்ச்சங்கமும் செந்தமிழ்ப் பத்திரிகையும் பெரும்புகழ் பெற்று விளங்கு வதற்கு இவரே காரணமாயிருந்தார். இலக்கிய ஆராய்ச்சியும் சரித்திர ஆராய்ச்சியும் இவரால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டன.

அந்நாளில் பல இடங்களுக்கும் சென்று பழஞ்சுவடிகள் தேடிச் சேர்த்துச் சங்கத்துப் பாண்டியன் புத்தகசாலையில் தொகுத்து வைத்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் 1902 ஆம் ஆண்டிலே செந்தமிழ் என்னும் திங்கள் இதழ் தொடங்கப்பெற்றபோது இப் பத்திரிகையின் முதல் இதழாசிரியராக இராகவையங்கார் பொறுப்பேற்றார். இப் பத்திரிகையில் 'ஆராய்ச்சி' என்னும் தலைப்பில் இவர்கள் தொடர்ந்து தமிழிலக்கிய இலக்கணம் முதலியன குறித்து ஆய்வுரைகள் எழுதி வந்தார். இவரு ଣା] L ULI ஆழ்ந்த கல்வியும் நுண்ணிய ஆராய்ச்சித் திறனும் பொருள்களை முறைப்படப்பாகு படுத்திப் பார்த்து விளக்கும் பேராற்றலும் இவர் எழுதிய கட்டுரைகளில் புலனாகின்றன.

செந்தமிழ் வாயிலாகப் பழஞ்சுவடிகளிலிருந்து எடுத்து இவர் பதிப்பித்த நூல்களும் பலவாகும். அவையாவன: ஐந்திணையம்பது உரை, கனாநூல், வளையாபதிச் செய்யுட்கள், புலவராற்றுப்படை, இனியது நாற்பது உரை, நேமிநாதம் உரை, திருநூற்றந்தாதி