பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 இராசராச சேதுபதி

பொய்தல் - விளையாட்டு; மான்ார் - பெண்கள்; சிற்றில் - மணலில் கட்டிய சிறு வீடு; முத்தம்பெய்து ஆலை உந்தும் - முத்தங்களை இட்டு அண்'லியர் ல் தள்ளும் பேண்ல்ர் - ப்கைவ்ர். கைத்லைவைத்தல் - செயலற்றுக் கைகளைத் தலைமேல் குவித்தல்; பெருந்துக்கமடைதல். நெய்தலை வேண்டி வந்தேற்கு நெய் பெறுவதற்காக விரும்பி வந்த எனக்கு;.ாற்குடம் - பால் நிறைந்த குடம்; நெய்யை விரும்பிய எனக்கு இரு பர்ற்குடம் வாய்த்தது. நெய்தல - நெய்தல் மலர்போன்ற கண்: பாற்குடம் : முலை; நேர்பட்டது - எதிர்ப்பட்டது, வெளிப்பட்டது.

317

இருகண் சிவந்தரி யேறென்னப் போரி லிகன் மறவர் மருகன் றமிழ்ப்பா வலருக் கெலாமும் வழங்கியருள் தருகண் மணியெனுஞ் சீராச ராசன் றடவரைவாய் முருக னிடத்துக்கு வேலடை யாள மொழிகுவரே.

அரியேறு ஆண் சிங்கம்; இகல் மறவர் - போரிடும் பெருவீரர் : மருகன் - வழித்தோன்றல்; எலாமும் - எல்லாப் பொருள்களும், எல்லாச் சிறப்புக்களும்; அருள்தரு - கருண்ை செய்கின்ற; கண்மணி - கண்மணி போல் சிறந்தவன்; முருகனின் இருப்பிடத்திற்கு வேல் அடையாளமாகக் கூறுவ்ர் என்பது வெளிப்படை, 'முருகனிடம் - மலை - முலை; வேல் - வேலாயுதம், கண்; உக்கு-வெளிப்பட்டு; வேல் அடையாளம் ஒழிகுவர் - கண்ணிாகிய அடைய்ாளத்தைக் காட்டர்துப்ோவர்.

3.18

கத்திரங் குங்கடற் சேர்ப்பன் மருவலர் காடுகெடப் பத்திரங் கைவத் தவன்சேது காவலன் பார்முழங்கும் முத்திரங் கூர்முர சாள்ராச ராசன் முதுகிரிவாய் அத்திரங் கைப்பற்று வார்கள்கல் லாரென் றறிந்தனமே.

நத்து இரங்கும் - சங்குகள் ஒலிக்கும்; மருவலர் - பகைவர்: பத்திரம் - வாள்; பார் - உலகழ்; முத்திரம்கூர்முரசு - மூன்று இயல் புடைய முரசுகள்; படைமுரசு, மனமுரசு, கொடைமுரசு , முதுகிரி - பழ மலை, அத்திரம் கைப்பற்றுவநர்கள் - நிலையற்ற பொருளைக் கைவசப் படுத்திவைத்திருப்பவர்கள் கல்லார் கல்வி அறிவுற்றவர் ஆத்திரம் நிலையற்ற்பொருள்; அம்பு; கண். அத்திரங்கைப்பற்றுவார் - அம்பு போன்ற கண்ண்ை மறைப்பவ்ர். க்ல்லார்- மலையையுடையவர்: கல் - .முலை: முலையினையுடையவர் என்றபடி , גהם ת: fו