பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 இராசராச சேதுபதி

போர் ஆர் விடை - போர் செய்தலில் வல்ல எருது; விடைமிசை ஊர் தரும் அண்ணல் - எருது ஏறிவரும் சிவபெருமான்; போற்றி - வணங்கி, துதித்து; ஆராதனை அவழிபாடு: பாராத தேனும் - எங்கும் பார்க்கக் கிடைக்காத பசுவும்: தேனு - பசு, அமிழ்து ஏந்தும் நாகம் - அமிர் தத்தைத் தாங்கிய பாம்பு, தேனு - வண்டு, கண்; பாராத தேனு - மறைக்கப்பட்ட கண்; அமிழ்து - அமிர்தம், பால்; நாகம் - மலை, முலை: அமிழ்து ஏந்து நாகம் - பால் தாங்கிய முலை

B22

பண்ணுட்சி செய்யுஞ் செவிப்புல நுட்பம் படைத்தபிரான் விண்ணுட்சி பெற்ற கொடைக்கரப் பாற்கர வேள் தவத்து மண்ணுட்சி யுற்றவன் சீராச ராசன் வரையிடத்தே

கண்காட்சி யின் முலைக கண்காட்சி யாயதென் காரணமே.

பண் - இசை, செவிப்புல நுட்பம் - செவியால் அறியும் நுட்ப அறிவு: விண்ணாட்சி பெற்ற - தேவருலக ஆட்சியை அடைந்த, பாற்கர சேது பதி மறைந்தமை கருதி இவ்வாறு கூறினர் என்க. மண் ஆட்சி உற்ற வன் - நாடாளும் உரிமை பெற்றவன்; கண்காட்சியின் முலை கண்காட்சி யாயது - கண்பார்வையில் முல்லை கண்ணுக்கு இலக்காக்கியது; கண் காட்சி இல் - கண்பார்வையில்லை; முலை கண்காட்சி ஆயது - முலை வெளிப்பட்டுக் கண்ணுக்கு விருந்தான காட்சியாயது.

323

கோரத்தை பூர்ந்த வள வர் குலேசர் குலமறவர் பாரிற் புரிந்த பெரும்பாக் கியத்தின் பயனென விங் கோரப் பிறந்தவன் சீராச ராச னுயர்வரைவாய்ச் சேரற்கு வந்தவர் தென்னவ இனக்கரஞ் சேர்த்தலென்னே

கோரம் - சோழன் குதிரை, வளவர் - சோழர், வளவர் குலேசர் குலமறவர் - சோழர் குலத்தைச் சார்ந்த மறவர்; செம்பி நாடாம் சேது நா ட்டு வாழ்வீரர் பாக்கியம் - புண்ணியம்; ஒர - நினைக்க: சேரற்கு உவந்தவர் தென்னவனைக் கரம் சேர்த்தல் என்னே - சேரனுக்காக மகிழ்வுடன் வந்தவர் தென்னவனாகிய பாண்டியனைக் கைப்பிடித்தது என்ன காரணம் என்பது மேற்போக்கான பொருள். சேரன் கு வந்தவர்