பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 157

வேதனம் - கூலி, வேலை தராமல் மிகுந்த கூலியைத் தந்தாய் என்பது வெளிப்படைப் பொருள்; வேலை - வேல் போன்ற கண்ணை: மிகவே தனம் நல்கினை - மிகுதியாக முலையை வெளிப்படுத்தித் தந்தாய். தனம் - முலை. மின்னணங்கு - மின்னல்போல ஒளி படைத்த பெண்.

829

கஞ்சே யமிழ்தென வுண்டவன் பாத நளினமிசை நெஞ்சே யணிகிற்குஞ் சீராச ராச னெடுங்கிரிவாய் அருசே லெனவொன்று சொல்லற் கிலாதும் மரியகெஞ்சம் செஞ்சே வகங்கொளிடமென் றெமக்குத் தெரித்தலென்னே.

நஞ்சே அமிழ்து என உண்டவன் - சிவபெருமான், பாதநளினம் - திருவடித்தாமரை, நெஞ்சே அணிகிற்கும் - நெஞ்சைப் .ெ ப ா ரு ந் த வைக்கும், தியானிக்கும். அ ஞ் சேல் - பயப்படாதே; உம் அரிய நெஞ்சம் - உம்முடைய அருமையான மனம்; சேவகங்கொள் இடம் - ஊழியஞ்செய்கிற இடம்; தெரித்தல் - தெரிவித்தல். அம் சேல் என ஒன்று சொல்லற்கிலாதும் - அழகிய கெண்டைமீன் போன்ற கண் என்று சொல்லற்கியலாதபடி; நெஞ்சம் - மார்பு, செஞ் சேவகம் கொள் இடம் - நன்கு யானை தங்கும் இடம்; யானை என்றது முலைகளை.

330

புன்கு பொரிசூழ் புகலூ ருறங்காப் புளியடியின் மன் கும ரற்குமுன் னேனே வணங்கி வழிவழிவாழ் தன் குடி யிற்றில கம்ராச ராசன் றமிழ் வரையீர் கன்கு வடுகல்கி னிர்கல்க லீரிதென் ரிையரே.

புன்கு பொரி சூழ் - புன்கு மரத்தின் பொரி போன்ற மலர்கள் சூழ்ந் துள்ள; புகலூர் - சேது நாட்டு ஊர் களி ல் ஒன்று: உறங்காப்புளி - எப்பொழுதும் இலை குவிய திருக்கும் புளியமரம்; மன் - நிலைபெற் றுள்ள, குமரற்கு முன்னோன் - முருகனுக்கு மு ன் னோன கி ய விநாயகன்; முன்னோன் - முத்தோன், தமையன்: வழிவழிவாழ் தலைமுறைதலைமுறையாக வாழ்ந்து வருகின்ற; திலகம் - நெற்றிப் பொட்டு, தலைமை. நன்கு வடு நல்கி நீர் நல்கலீர் - நல்ல மாவடுவைத் தந்து குடிப்பதற்குத் தண்ணிரைத் தந்தீரில்லை என்பது வெளிப்படை தன் குவடு நல்கினர்; குவடு - மலை, முலை; நன்கு வடு நல்கலீர்! வடு - மாவடு போன்ற கண். நாரியர் - பெண்.