பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 இராசராச சேதுபதி

அதிகாரம் உண்டாயது. இது வெளிப்படைப்பொருள். இன்பால் நிறைந்தும் - இனிய பால் நிறைந்தும்; பால் நிறைவுற்றமையால் அமிழ்தமாயிருந்தது. மைக் கண் - மைதிட்டப்பெற்ற கண் கைவைத் தும் - கைவைத்து மறைத்தும்: எனக்கு அதிகாரம் அரும்பினது - எனக்கு அதிகாரம் அரும்பின்கண்ணது; அரும்பு - முலை.

B3 G

மரம்பட மாக்கடல் வற்றி வறக்க வலியரக்கன் சிரம்பட வாளிப் பெருமழை பெய்த திருப்புயலைத்

வேத்தித் தொழும்ராச ராசன் றிகிரியின் வாய் ساساl Jubی சரம்விடுக் கத் தெரி யார்க்குவல் லாண்மை தருவதின்றே.

மரம்பட - மரா மரம் துளைபட; வற்றி வறக்க - வற்றிக் காய்ந்து போகும்படி, வலியரக்கன் - வலிமை பெற்ற அரக்கனாகிய இராவணன்: சிரம்பட - தலை அற்று விழும்படி, வாளிப் பெருமழை - அம்புமழை. வாளிப் பெருமழை பெய்த திருப்புயல் என்க. திருப்புயல் - அழகிய மேகவண்ணனாகிய இராமன். திரம்பட உறுதியாக ஏத்தித் தொழும் - துதித்து வணங்கும்; திகிரி- மலை, சரம் - அம்பு அம்புவிடத் தெரியாதவருக்கு வலிய வீரம் பொருந்தாது என்பது வெளிப்படை. சரம் விடுக்கத்தெரியார் - அம்பு போன்ற கண்ணை வெளிப்படுத்தத் தெரியா தவர்; வல் - சூது, முலை; வல்ஆண்மை.-முலையினது ஆளும் தன்மை: தகுவதன்று பொருந்தாது. ஏற்றதாகாதது.

837

அஞ்சித் தொழுஞ்சிற் றரசர்க் கரணென லாகியன்பால் எஞ்சித் தந்தித்திப் பவன்ராச ராச னிருங்கிரிவாய் கெஞ்சிற் குவடு மிகுந்துள ராகின்ற கேரிழையார் தஞ்செய்கை யென்றும் வடுப்பட்ட தாதல் தகுதியதே.

அரண் - கோட்டை, காப்பு: எம் சித்தம் தித்திப்பவன் - என் மனத் துக்கு இனிப்பவன்; நெஞ்சிற்கு உவடு மிகுந்துளதாகிய நேரிழையார் - உவடு - வெறுப்பு; நெஞ்சினிடத்து வெறுப்பு மிகவுடையராகிய பெண்டிரின் செய்கை குற்றமுடைத்தாதல் பொருத்தமானதே என்பதாம். நெஞ்சில் குவடு மிகுந்துளர் -மார்பிடத்தே முலை மிகுந்து காணப்படுவர்; குவடு மலை, முலை; தம் செய் கை வடுப்பட்டதாதல் தகுதியதே - தம் முடைய சிவந்த கை எப்பொழுதும் கண்ணில் பொருந்தியிருப்பது ஏற்ற தாகுமா ? ஆகாது என்றபடி. வடு - மா வடு, கண்.