பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XII மகாவித்துவான் ரா. இராகவையங்கார்

முத்தொள்ளாயிரச் செய்யுட்கள், பன்னிருபாட்டியல், தொல்காப்பியச் செய்யுளியல், நச்சினார்க்கினியர் உரை முதலியனவாகும். எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகிய அகநானூற்றைப் பதிப்பிக்கச் சங்கத்தின் வாயிலாக இவர் எடுத்த முயற்சி முற்றுப்பெறவில்லை. பின்னாளில் கம்பர் விலாசம். இராசகோபாலையங்கார் இந்நூலை வெளியிட முன்வந்த போது தாம் முன்பு தொகுத்து வைத்திருந்த குறிப்புகள் முதலியவற்றை அவருக்கு வழங்கி அந்நூல் சிறப்புற வெளிவர உதவினார். இவ்வாறு வேறு புலவர் சிலருக்கும் இவர் ஏடுகள் முதலியன தந்து உதவியுள்ளார்.

கைந்நிலைப் பிரதியை இ. வை. அனந்தரா மையர் விரும்பியபோது இவர் மனமுவந்து அவருக்கு அதனை அளித்தார். இவ்வாறே தொல்காப்பிய இளம்பூரணம் செய்யுளியல் உரைப் பிரதியையும் நவநீதப் பாட்டியல் உரையையும் இவர் யாதொருவகைக் கைம்மாறும் கருதாது பேராசிரியர் எஸ். வையா புரிப் பிள்ளையவர்களுக்குத் தந்தனர். பிள்ளையவர்கள் அவற்றைத் தம் பதிப்பில் நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். தாம் க்ற்ற கல்வியைத் தம்முடன் மாய்ந்து போக விடாதபடி அறிஞர் பிறருக்கும் உதவவேண்டும் எ ன் னு ம் பேரவா உடையார் இராகவையங்கார் என்பது மேற்கூறியவற்றால் தெரிய

வரு ம .

டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களைப் போலவே இவரும் நம் பண்டைநூற் கருவூலங்களைத் தேடித்தொகுத்து வைப்பதில் பேருக்கம் கொண்டிருந்தார், மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு இவர் தேடியளித்த சுவடிகள் பலவாகும். பின்னாளில் தம்மிடமிருந்த ஏட்டுச்சுவடிகள் பல வற்றைப் பலர்க்கும் பயன்படும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக் கழக நூல் நிலையத்திற்கு இவர்கள் தந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. அவர்தம் இல்லத்தில் எஞ்சியிருந்த சுவடிகளை (51) அவருடைய புதல்வர் வித்துவான் இராமானுஜ அய்யங்கார் சில திங்களுக்குமுன் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பழைய சுவடிகளைக் காகிதத்தில் பிரதி செய்து இவர் படித்ததும் உண்டு. இராமநாதபுரத்தில் உள்ள அவர் மாளிகைக்கு நான் சேன் திருந்த போது மகா வித்துவான் அவர்களால் எழுதப்பெற்ற நீலகேசி உரையுடன் கூடிய கையெழுத்துப் பிரதியை அவர் மகனார் காட்டினார். சமணசமயம் சார்ந்த தத்துவக் கருத்துகள் மி கு ந் த இந்நூலையும் உரையையும் பிரதிசெய்து படித்தமையை நோக்கினால் சமயக் காழ்ப் பின்றித் தமிழ்நலம் பேணுவதொன்றே இவர்தம் நோக்கமாயிருந்தது என்பது தெரியவரும். -