பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 163

வெளிப்பக்கத்தைக் காட்டிய ஏதுவால் பெருக்கம் இல்லை என்பர் என்பது மேற்போக்கான பொருள். இராசியில் கடை - மீனம்; கண்ணுக்கு உவமை: இராசியிற் கடைக்கு அயல் - கும்பம்: முலைக்கு உவமை. இ ராசியிலை - பொருத்தமில்லை.

343

அன்பம ரும்பெரு கண்பரைத் தன்னெக்க வாதரித்தல் தன் பர மென்று தெரிந்தவன் தேவைத் தராபதிபார் மன்பர வும்புகழ்ச் சீராச ராசன் வளவரைவாய் இன்ப மரங்கையுள் ளாரெனக் கீந்தன ரின் கனியே.

பரம் - பொறுப்பு, கடமை; தேவைத்தராபதி - இராமேசுவரத்தை ஆளும் அரசன்; தராபதி - அரசன்; பார்மன் - உலகிலுள்ள மன்னர்; பரவும் புகழ் - துதிக்கும் படியான கீர்த்தி; இன்ப மரம் கையுள்ளார் எனக்கு இன்கனி ஈந்தனர் என்பது வெளிப்படை. பமரம் - வண்டு. கண் ; இன் பமரம் கையுள்ளார் - இனிய கண்ணைக் கைப்பற்றியவர்: கனி - கனிபோ ன்ற முலை.

344

கவரியை பீச்சோப் பியையால வட்டத்தைக் கைப்பிடி த் துத் து வரியை சேயிதழ் வேளமின் ர்ைபணி சூழ் வரவிண் சுவரியை தேவை வருராச ராசன் றெடர்வரைவாய் "உவரியை நீர்கைவைத் தீர்கல் லசல முத வினிரே.

கவரி, ஈச்சோப்பி, ஆலவட்டம் என்பவை விசிறிவகை. கவரி - வெண் சாமரம், ஈச்சோப்பி - ஈயொட்டி, ஒருவகை விசிறி, ஆலவட்டம் - பெரு விசிறி; துவர்.இயை சேயிதழ் - பவளத்துக்கு ஒப்பான சிவந்த உதடு: வேளமின்னார் - சிறைப் பிடிக்கப்பட்ட மகளிர்; பணிசூழ்வர - பணிமாறி வர, வீசிவர; தொண்டு செய்து சுற்றிவர, விண்சுவர் இயை தேவை - வானளாவ உயர்ந்த மதிலை யுடைய தேவைப்பதி. உவரி - உவர்நீர். உப்பு நீர், உவர் நீரை நீர் கைவைத்துக்கொண்டு நல்ல நீரைத் தந்தீர் என்பது வெளிப்படை. நல்ல சலம் - நல்ல தண்ணிர்; உவரி - கடல், கண், நல் அசலம் - நல்ல மலை. rமலை .