பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[66 இராசராச சேதுபதி

கரி - யானை; பரி - குதிரை, யானை, தேர், குதிரை, காலா ள் இவை நாற்படையாம். காசினி - பூமி, விரிதிரை - பரந்த கடல்: இவண் அறிதின் எய்தினிர் - இங்கே மிகவும் அருமையாய் வநதுள்ளிர்; தும்பி : வண்டு, கண், தும்பி கை வாய்ந்தவராதல்; கண்ணைக் கையால் மறைத் தவராதல்; பெரிதும் முலை இடை ஊறு செய்யாவணம் பேணுதிர் - மிகுதியும் உம் முலை இடைக்குத் துன்பம் செய்யாவண்ணம் காப்பீர். இப்பொழுது முலை வெளிப்பட்டு இடைக்கு ஊறு செய்துகொண்டிருக் கிறது என்பதாம்.

351

சாருக்கு முந்து கொடைப்பாற் கரவள்ளல் கண்டதவம்

பாருக் குவந்த தெனுராச ராசன் பனிவரைவாய்

ஆருக்கு மாகமுன் ல்ைவாயி லல்லாம லவணியிலே

பேருக் கெனினுமுண் டோவம்பு கையிற் பிணைமயிலே.

|

கார் - மேகம்; முந்து-விஞ்சிய; பார் - பூமி, ஆருக்குமாக ஆருக் கான்ாலும் ஆகட்டும்; முன்னால் - முற்பட; அவனியிலே வாயில் அல்லால் கையில் வம்பு உண்டோ என்க. முற்பட வாயினால் வம்பு வளர்ப்பது உண்டே யன்றிக் கையில் வம்பு வளர்ப்பதில்லை என்பது வெளிப்படை. ஆகம் முன் நால்வாயில் அல்லாமல்-மார்பின் முன்னால் யானை போன்ற முலைக்கு அல்லாமல்; நால்வாய் - யானை, முலை; வம்பு உண்டோ - கச்சுக் கட்டுவது உண்டோ? முலைக்கே கச்சுக்கட்டுவர் என்பதாம்; அம்பு கையில் பிணை - அம்புபோன்ற கண்ணைக் கையில் கொண்டுள்ள: மயிலே - மயில் போன்ற சாயலையுடைய பெண்ணே.

B52

மாரி வழங்குதல் போலே வழங்கி மகிதலத் துப் பாரி வழங்கவர் தான் பின்னு மென்றெனும் பாற்கரன்சேய் வேரி வழங்கு தொடைராச ராசன்றண் வெற்பினுள்ளே வாரி வழங்க வறியார் தனத்தை மருவியென்னே.

மாரி - மேகம்; மகிதலம் - பூமி: பாரி - கடையெழுவள்ளல்களுள் ஒருவன், பறம்பு மலைக்குத் தலைவன்; பாரியே மீண்டும் கொடை தர வந்தான் என்று எண்ணும்படியாக அமைந்தது பாற்கர சேதுபதியின் கொடை. சேய் - புதல்வன்; வேரி - தேன்; தொடை - மாலை, முல்லை