பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 1 5 9

357

விண்டொடு கோபுரத் தேவைப் பதியிரா மேசனடி கண்டொடுஞ் சேவையன் சீராச ராசன் கனவரைவாய் ஒண்டொடி கண்ணே யுளவைம் புலனுமென் ருேதினர் தாம் கண்டில ரும் மையங்தோ வொத்த வின் பங்கண் கண்டிலையே.

விண் - ஆகாயம்; இராமேசன் - இராமநாதன், கண்தொடும் சேவை யன் - கண்ணால் தொட்டு வணங்குபவன்; எட்டு அங்கமும் நிலம்தோய விழுந்து வணங்குபவன்; ஒண்டொடி கண்ண்ே உள ஐம்புலனும் என்று ஒதினர் - திருவள்ளுவர்; பெண்ணிடத்தே ஐம்புல இன்பங்களும் ஒருங்கே பொருந்தியுள என்பதாம். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புல னும் ஒண்டொடி கண்ணே உள' (குறள். 1101) என்னும் வள்ளுவர் குறளைக் கவிஞர் இப்பாடலில் எடுத்துக் காட்டியுள்ளார். ஒத்த இன்பம்முலைகளால் இணைந்த இன்பம்; கண் கண்டிலை - கண்ணால் பார்த்தா யில்ல்ை -

B58

களவென்ப தின்றிப் புவிப்பரப் பைத்தனிக் காத்த புகழ் உளவின் கிழவன் ரகுநாதன் சேதுக்கு வாய்த்தவன்டோல் அளவின்று பாடல் புனராச ராச ன்ணிவரைவாய்

வள வன்முன் மற்றை யிருவர் கொடிய மறைந்தனவே.

தனிக் காத்த புகழ் - ஒருவராய் நின்று காத்த புகழ்: புகழ் உளவன் கிழவின் ரகுநாதன் என்க. கிழவன் ரகுநாத சேதுபதி அமிர்த கவிராய ரால் ஒருதுறைக் கோவை பெற்றவர்; இவர் 1645 முதல் 1670 வரை சேது நாட்டை ஆண்டவர்; அளவின்று பாடல் - அளவிடமுடியாத புகழ்ப் பாடல்கள். வளவன் - சோழன்; மற்றை இருவர் - சேரர், பாண்டியர்; வள வல் முன் - வளம் பொருந்திய சூதாகிய தனத்தின் முன் , இருவர் கொடி சேரன் கொடியாகிய சிலைப்புருவமும் பாண்டியன் கொடியாகிய கயற்கண்ணும்.

단 59

மெய்கொண்ட செந்தமி ழேடெதி ரேறிய வீறுவைகை

செய்கொண்டு கெல்விளைக் குஞ்செம்பிநாடு செழிக்கவரும் பொன்கொண் டிலாமொழி யான்ராச ராசன் புனவரைவாய்க் கைகொண்டு நீர்கட் படாமிட் டியானையைக் காட்டினிரே.

22