பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 179

மலைவழியில் இருட்டிற் செல்லார் என்பதாம். மை மைதிட்டப் பெற்ற கண்; இருளிற்புகுவாரோ - இருளிற்புகும்படி செய்வாரோ கை மறைத்து இருளடையச் செய்யார் என்றபடி, விலங்கல் - மலை, முலை.

882

இலங்கைக் கரசன் முடிபத்தும் வீழ வெடுத்த சிலை யலங்கற் றுழாயண்ணல் சேவடிக் கன்பி ன சலமெனக் கலங்கற் கிலாமணச் சீராச ராசன் கனவரைவாய் விலங்கற் குரியவர் நீரே வண்டங்கை விழைதலினே.

இலங்கைக்கு அரசன் - இராவணன், சிலை அலங்கல் துழாய் அண்ணல் - வில்லேந்திய இராமன்; அசலம் என - மலைபோல; கலங் கற்கு இலா மனம் - அசைவற்ற மண்ம். அண்டம் - உலகம். உலகம் முழுவதும் கையுற விரும்புதலால், விலங்கற்கும் உரியவராயினிர் என்ட தாம். விலங்கல் - மலை, முலை; வண்டு அம் கை விழைதலினே வண்டுபோன்ற கண்ணைக் கையால் விரும்பிக் கொள்ளுதலான் என்ற

---

888

கரித்தலை யேறு மரியே றென முனே காய்ந்துவென்று சிரித்தலை யுள்ள மறவோர் தொழுமிறை சீர்ப்புகழ்மை வரித்தலை மிக்க கொடைராச ராசன் வளர்வரைவாய் பிரித்தலை யேகொள்வை யாற்றனஞ் சேர்கின்ற பெற்றியிலே.

கரித்தலை - யானையின் தலை: அரியேறு - ஆண் சிங்கம்: முனை போர்க்கிளம்; காய்ந்து - சினந்து வரித்தல் - தன்னதாகப் பெறுதல் பிரித்தலையே...பெற்றியிலே-தனம் சேர்கின்ற தன்மையில்.பிரித்தலையே கொண்டுள்ளாய் என்பது வெளிப்படை. பிரித்து அலையே கொள்வை கையை விரித்துக் க்ண்ணைப் பற்றுவை; அலை - கடல்,'கண்: தனம் முலை.

884

செய்ச்சால் வளைதவழ்ங் தூர்செம்பி காடுடைச் சேதுபதி பொய்ச்சார் பிலாதவன் சீராச ராசன் புனவரைவாய் மெய்ச்சார் பினிய தனஞ்சுவை காண்கின்ற வேளையிலே கைச்சா யகமொடு கின்றயி... தென்ன காரணமே.