பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XIV மகாவித்துவான் ரா. இரா கவையங்கா

பொருள்கள் பற்றியும் அரிய உரைகள் பலமுறை நிகழ்த்தியுள்ளார் . சென்னை நகரிலுள்ள அறிஞர் பெருமக்கள் பலரும் இவருடைய சொற். பொழிவுக்கு வந்திருந்து கேட்டு இன்புற்றனர். இவர்களுள் மகாகனம் சிநிவாச சாத்திரியார், சர். எஸ். வரதாச்சாரியர், டாக்டர் உ. வே. சாமிநாதையர் முதலிய சிறந்த பேரறிவாளரும் வந்து கலந்துகொண்டது குறிப்பிடத் தக்கது. இவருடைய வாக்குவன்மை அறிஞர் பெருமக் களையும் பிறரையும் எவ்வாறு கவர்ந்து இழுத்தது என்பதற்கு இந் நிகழ்ச்சி தக்க எடுத்துக்காட்டாகும்

வடமொழிநூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தும் உள்ளார். பகவத்கிதை முழுமையும் தாழிசைப் பாக்களில் மூலநூலின் சொற்பொருளமைதி பிறழாவண்ணம் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்நூல் இன்னும் அச்சாகவில்லை. இக்கீதைத்தாழிசை குறித்து விரிவு ரைகளும் சென்னை முதலிய இடங்களில் ஆற்றினார். மகா கன்ம் வி. எஸ் சீநிவாச சாத்திரியார் அவர்களின் வேண்டுதலால் காளிதாச மகாகவியின் சாகுந்தலத்தைப் பாட்டும் உரையும் கலந்த நடையில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். வடமொழிச் சுலோகத்திற்குச் சந்தப் பாடலும் வட மொழியிலும் பாகத்திலும் உள்ள உரைநடைக்குத் தமிழுரை நடையு மாக அமைத்துள்ளார். இம் மொழிபெயர்ப்பு நூல் வி. எஸ், சீநிவாச சாத்திரியார் அவர்களுடைய பொருளுதவியால் 1938-ல் பதிப்பிக்கப் பெற்றது. வால்மீகி இராமாயணத்தில் சில பகுதிகளையும் இரகுவமி சத்தில் சில சருக்கங்களையும் இவர் தமிழாக்கம் செய்துள்ளார், வியாச பாரதத்திலுள்ள நீதிப் பகுதிகளை வெண்பாவில் அமைத்து 203 பாடல் களில் பாரத நீதிவெண்பா என்னும் ஒர் அற நூலையும் ஆக்கியுள்ளார். வடமொழிநூல்களின் மொழிபெயர்ப்புத் தொண்டினைச் சிறப்பிக்கு முகத்தான் இவருக்கு பாஷா கவிசேகரர்' என்னும் விருதை அறிஞர் பேரவை சூட்டி மகிழ்ந்தது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1935 ஆம் ஆண்டு தமிழ் ஆராய்ச்சித்துறை என ஒரு தனிப்பகுதி தோற்றுவிக்கப்பட்டது . இத் துறையில் முதன்மை ஆராய்ச்சியாளராக மகாவித்துவான் ஐயங்கார் அவர்களை அழைத்தனர். தம்முடைய 65 ஆம் வயதில் இப் பதவியை ஏற்று 1941 வரை ஆறு ஆண்டுகள் இங்கே பெருந்தொண்டாற்றினர். ஆராய்ச்சித்துறைப் பணிகளோடு முதுகலை மா ணவர்களுக்குக் கற்பித்தும் வந்தார் . ஐயங்கார் அவர்களின் பெரும்புலமையும் வாக்குவன்மையும் போதனா.முறையும் மாணவர்களைப் பெரிதும் ஈர்த்தன. மாணவர்கள் இவரிடம் பாடம் கேட்டலைப் பெரும் பேறாகக் கருதினர்.