பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு து ைறக் கோவை 18; 3

892

செல்லா லமர்ந்த திருக்கரத் தாற்றமிழ் சேர்ந்தளித்த வல்லாளன் சேது பதிரகு காதனை மானுமெனப் பல்லார் துதிசெயும் சீராச ராசன் பனிவரைவாய் கல்லா லடிகாட் டினையாற் குருக்கண்முற் கைமறைத்தே.

செல் - மேகம்; அமர்ந்த - தங்கிய, விரும்பிய, புயல் கையில் வைத் தவன் (390) என்பதனுடன் ஒப்பு நோக்குக. வல்லாளன் - வல்லமை பொருந்தியவன்; சேதுபதி ரகுநாதன் - ரகுநாத சேதுபதி, மானும் - ஒக்கும்; ரகுநாத சேதுபதி அமிர்த கவிராயர் பர்டிய ஒருதுறைக் கோவை யைப் பாராட்டிப் பரிசில் தந்த சிறப்புட்ையார். கல்லால் அடி - கல்லால மரத்தின் அடி, குருக்கள் முன் கை மறைத்தே - கல்லால மரத்தின் அடியில் வீற்றிருக்கும் குருவினை மறைத்து: கல்லாகிய, முலையும் ஆலாகிய வயிறும், அத்ன் அடியிலுள்ள அல்குலும் காட்டினை என்பது குறிப்பு: குருக்கண் - நிறம் பொருந்திய விழி.

B 93

மத்தம் பிறைத்தலை வைத்தோன் மலரடி மன்னுளத் து ாகித் தம் நினைக்கின்ற சீராச ராச னெடுங்கிரிவாய்ச் சித்த முருகிட மாய்க்கொண் டுளாரித் தெரிவையர்க்கு மெத்தென் றிருப்பதல் லாற்கரங் கட்டெனல் மேன்மையின்றே.

மத்தம் - ஊமத்தம் மலர். பிறைத்தலைவைத்தோன்- சிவபெருமான்: நித் தம் - நாள்தோறும், எந்நாளும்; சித்தம் உருகிடமாய்க் கொண் டுள்ளார் - மனத்தை நெகிழ்விடமாகக் கொண்டவர்; மெத்தென்றிருப்ப தல்லால் கரங்கட்டு எனல் மேன்மையன்று - மென்மைத் தன்மை பெற் றிருப்பதல்லாமல் கரடுமுரடான வன்மையாயிருத்தல் பெருமை தருவ தன்று என்பது வெளிப்படை. கரம் கட்டு - கரடு முரடானது, நஞ்சு திங்கியது; கரம் - நஞ்சு. சித்தம் முருகிடமாய் - நெஞ்சு முருகனிடமாகிய மலையாய்: கரம் கட்டு - கை கண்ணையுடையது

394

செய்ம்மீன வாளை, கமுகினிற் கண்படுஞ் செம்பிருன்னட் டம்பி ன வன்பொர வாழவந் தோனழ கான்மடவார்

எம்மீன கேதனனென் ராச ராச னிருங்கிரியார் so தம்மீன மாற்றினர் தம்மீன மாற்றல்ர் தாமென்னையே.