பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 இராசராச சேதுபதி

செய்ம்மீனவாளை - வயலில் உள்ள மீனாகிய வாளை, கமுகினின் கண்படும் - கமுகின் மேலிடத்தே' தாவிப் பொருந்தும்: கண் படும் - உறங்கும். மீனவன் - பாண்டியன்; பெர் ர - ஒப்ப; மீனகேதனன் - மீனக் கொடியுடையவனாகிய மன்மதன், தம்மீன்ம் - தம்முடைய ஈனம். மாற் றினரும் மாற்றலரும் ஆயினர். தம்மீனம் மாற்றினர் - தம்முடைய மீன் போன்ற விழியை மாற்றினர்; தம்மீனம் - தகரத்தின் மீப்பட்டுள்ளனம் என்ப்து தனம்- தனம் மாற்றிலர் என்றவாறு.

395

முன்னவ ரென்று சொலப்பட்ட சேது முதல்வர்புகழ் தன்ன தெனச்செய்யுஞ் சீராச ராசனைச் சாரலர்போல் கன்குடை விட்டனிர் கோன்மறைத் தீர்வலி யானே விட்டிர் என்னெ தி ரேயிடை தோற்றல்செய் தீரர சென்னதுவே.

முன்னவர் - முன்பே அரசாண்டவர்; சேது முதல்வர் - சேது காவலர், சாரலர் - பகைவர்; நன்குடைவிட்டனிர், கோல் மறைத்திர். வலியானை விட்டீர், என் எதிரே இடை தோற்றல் செய்தீர், அரசு என்னது என்க.போ ர்க்களத்தில் பகைவர் குடையைப் போட்டு அம்பை மறைத்து, வலிய யானையையும் ஒழிந்து ஒடிப்போமாறுபோ ல எனக்கு எதிரே தோற்றுவிட்டீர்; அதனால் அரசு என்னுடையது என்பது வெளிப் படை. நன்கு உடை விட்டனிர் - பெரிதும் உன்டையை நெகிழ விட்டீர்; கோல் - அம்பு, கண்; கோல் மறைந்தீர் - கண்ணை மறைத் தீர்; வலி யானை முலை; இடை தோற்றல் - இடை வெளிப்படுதல்; அரசு அரசிலை போன்ற அல்குல்.

896

காரற்ற காலையுந் தன்கொடை யிற்சிறு காதவன்குபேரற் கிணைகொள் பெருநிதி யோன்சுவை பெற்றதமிழ்க் காரற் புதவன்பன் சீராச ராச னணிவரைவாய் - சேரற் கணிவந்து கோடிாறன் மேவுக் திறமென்னையே.

கார் - மழை; சிறுகாதவன் சுருங்காதவன்; குபேரற்கு இணை கொள் - குபேர்னுக்கு ஒப்பான்: ஆர் அற்புத அன்பன் . சுவைக்கும் சிறந்த அன்புடையோன்; சேரற்கு - சேரனுக்கு; கோமாறன் - பாண்டிய மன்னன், சோனுக்குப் பக்கத்தில் வந்து பாண்டியனைச் சேரும் வகை என்ன, விநோதம் என்பது வெளிப்படை, சேற்கண் நிவந்து - மலை