பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. சண்முகம் பிள்ளை XV

பாரிகாதை '

என்பது இவர் ஆக்கிய தமிழ்க் காவியம். இக்காவியம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் இராசா சர் அண்ணா மலைச் செட்டியார் அவர்களால் அரங்கேற்றம் செய்விக்கப் பெற்றது. இதுவே அப்பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ் வெளியீடாக 1937-ல் வெளியிடப் பெற்றது. அடுத்து இவர் எழுதிய தமிழ் வரலாறு இரண்டாவது வெளியீடாக 1941 - ல் வெளிவந்தது. அண்ணாமலைப்பல்கலைக்கழக முதுகலை மாணவர்க்குக் குறுந்தொகையைப் பாடம் சொன்னபோது நல்ல பல பாடங்களும் புதிய பொருள்களும் இவர்கள் கண்டார்கள். தாம் கண்ட புதுவிளக்கங்கள் அமைய குறுந்தொகை உரை நூலை இவர் ஆக் கினார். இதில் 112 பாடல்களை உரையுடன் பின்னாளில் அப்பல் கலைக் கழகம் வெளியிட்டது. எஞ்சிய பகுதிகள் வெளிவராமல் போனது தமிழுக்கு ஒரு பேரிழப்பேயாகும். பத்துப்பாட்டுள் பெரும்பாணாற்றுப் படை, பட்டினப்பாலை என்னும் இருபெரும் பாடல்களுக்கு ஆராய்ச் சியுரை எழுதியுள்ளார். தித்தன், கோசர் பற்றி இவர் எழுதிய ஆய்வுரை களும் தனி நூலாக வந்துள்ளன. இவையெல்லாம் அண்ணாமலைப்பல் கலைக் கழகத்தில் பணியாற்றியபோது படைக்கப்பட்டனவாகும்.

19 11-ல் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலிருந்து ஒய்வு பெற்ற பின் ம கா வித்துவான் அவர்கள் இராமநாதபுரத்தில் உள்ள தம் இல்லத்தில் வாழ்ந்து வந்தார்கள். இவர்தம் அருமைப் புதல்வராகிய வித்துவான் ா. இராமாநுஜ அய்யங்கார் தந்தையாரின் பெருமைகளை நன்கு அறிந்த வர ாதலின் தந்தைக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்து வரலா னார். கண்பார்வைக் குறைவாலும் உடல் தளர்வாலும் அதன்பின் மகாவித்துவான் அவர்கள் வெளியூர்களுக்குச் செல்வதை நிறுத்தி விட்டார். தம்மை அடுத்துவந்து கேட்டவர்களின் ஐயங்களைப் போக் கித் தமிழ் விருந்தினை அளித்துக் கொண்டிருந்தார். இடை யிடையே சேதுபதிகளைக் கண்டு அளவளாவியும் வரலாயினர்.

இவ்வாறாகத் தம் ஆயுட்காலம் முழுமையும் தமிழைக் கற்றும் கற்பித்தும் பெருந்தொண்டாற்றியவர் இவர். என்றும் நிலைத்து வாழும் பாடல் நூல்களையும் உரைநடை நூல்களையும் ஆக்கியளித்துப் பெரும் புகழை நிலைநாட்டியவர். இத்தகு பெருமை படைத்த மகா வித்துவான் அவர்களின் மறைவு விய ஆண்டு ஆணி மாதம் 2 ஆம் நாள் வியாழக் கிழமையன்று ( 11-7-1946 ) நிகழ்ந்தது. அப்பொழுது அவர்களுடன் பழகிய பேராசிரியர்களும் கவிஞர்களும் பிறரும் அவர்களுடைய மறைவு குறித்து இரங்கி எழுதிய உரைகளும் பாடல்களும் பலவாகும். மகா வித்துவான் அவர்கள் முதல் ஆசிரியராய் விளங்கி வெளியிட்ட செந்தமிழ்ப் பத்திரிகையின் அந்த ஆண்டு ஆனிமாத இதழை மகாவித்துவான் அவர் களின் நினைவு இதழாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.