பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமநாதபுரம் சமஸ்தானம் மகாராஜா

பாஸ்கர சேதுபதி அவர்கள்

சமஸ்தான மகாவித்துவான் ரா. இராகவையங்கார்

அவர்களுக்கு அளித்த உரிமைப் பத்திரம்

1901 u நவம்பர் மீ 4உ மதுரை ஜில்லா இராமநாதபுரம் சமஸ் தானம் லேட் ராஜா முத்துராமலிங்க சேதுபதி மகாராஜா அவர்கள் புத்திரர் மறவ ஜாதி சிவமதம் ராஜா அந்தஸ்துள்ள அரீமத் ஹிரண்ய கர்ப்பயாஜி ரவிகுல முத்து விஜய ரகுநாத ராஜாயம் பாஸ்கர சேதுபதி மகா ராஜா அவர்கள் இராமநாதபுரத்தில் இருக்கும் லேட் ராமானுஜ அய்யங்கார் புத்திரர் பிராமண ஜாதி வைஷ்ணவ மதம் வித்வத் ஜீவனம் சேது சமஸ்தானம் தமிழ் வித்வான் ஆர். இராகவ அய்யங்காருக்கு எழுதிக் கொடுத்த செட்டில் மெண்டு தஸ்தாவேஜா. ஒருவன் இவ்வுலகிற் செய்ய வேண்டிய தர்மங்கள் பலவற்றிலும் தனது தாய்ப்பாஷை யின் பொருட்டுச் செய்யும் தருமம் அதிகம் சிறந்ததாகும். நமது சமஸ்தானம் தமிழையே தனக்குத் தாய் பாஷையா கவுடைத்தாதலால் எமது முத்திய ரா ஜாக்க ளெல்லாம் பரம்பரையாகத் தமிழ் வித்துவான்களுக்கு ஏராளமான உபகாரங்கள் செய்துள்ளது பிரசித்தமானது. சேர சோழ பாண்டியர்கட் குப் பின் சுத்த தமிழ் அரசர்களான சேதுபதிகளே தமிழ் பாஷாபிவிருத்தி செய்பவர்களும் தமிழ் வித்துவான்களை ஆதரிப்பவர்களும் ஆகின்றார்கள். தமிழ் வித்துவான்களுக்குப் பரம்பரையாகப் பெற்றுவரக்கூடிய சாசுவத தர்மங்கள் செய்து வருவது இந்த சமஸ்தானத்தில் தொன்றுதொட்டு வரும் வழக்கமே . இக்காலத்துக்குத் தக்க தமிழ் வித்துவான்கள் மிகச் சிலரானமையாலும் அச்சிலருக்கும் கவர்மெண்டார் தக்க உதவியொன்றும் செய்யா மையாலும் நமது, புராதன தமிழ் பாஷையானது விருத்தி யடையாது குறைகின்றது. இவ்வாறு நமது அருமைத் தாய் பாஷை குறைந்து கெடாதபடி பாது .ாட்குமிடத்து அப்பாஷையை நன்றாய்க் கற்றுத் தேர்ந்த வித்துவான்களே முதலில் பாதுகாக்கத் தக்கவர்க எாகின்றார்கள். அவர்களாலேதான் அப்பா வைடியின் உயர்வும் அருமை யும் பெருமையும் இனிமையும் புலப்படுவதோடு அப்பாஷை வளர்ந்து நிலைபெறுதலும் உண்டாவது. ஆதலால் நமது சமஸ்தானத்தில் பிறந்து வளர்ந்து நமது சமஸ்தானத்து அன்ன பிரபாவத்தினாலேயே தமிழ்க் கல்வியில் பூரண பாண்டித்தியமுடையவராய் ராவ்பகதூர் பி. அரங்கநாத முதலியார் முதலிய பல கல்வியில் பெரியோர்கள் மிகச் சிறப்பித்து எழுதிய