பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சி. கமலையா ΧΧΙ ! !

ை யி குந்த ஆம்ப்ட்ஹில் பிரபுவால் வரவேற்பில் கலந்துகொள்ள அழைக் கப்பட்டார். 1911 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற அரசர்-அரசி 4 சூட்டு விழாவிலும் சென்னை அரசின் அழைக்கப்பட்ட விருந்தினர்

| r _* இவர் .

பொதுவாழ் வில் பெற்ற பெருமை

19 13 છે. ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் வாழ்நாள் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னைச் சட்டமன்ற உறுப்பினராக எதிர்ப்பின்றி 1915 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அப்பதவியில் இருந்தார். அறநிலையப் பாதுகாப்புச் சட்ட மசோதாவைப் பரிசீலிக்கும் குழுவுக்குத் தலைவராயிருந்து மசோதாவை விவாதிக்கும் பொழுது, சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றார். 1920 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத்தலைவராக நியமிக்கப்பட்டார். 1923 ஆம் ஆண்டு மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டார். இராமேஸ்வரம்: கும்பகோணம் ஆகிய தேவஸ்தானக் கமிட்டிகளின் உறுப்பினரா யிருந்தார். மதுரையில் நடைபெற்ற சென்னை மாகாண அரசியல் மாநாட்டுக்கு வேற்புக் கமிட்டியின் தலைவராயிருந்தும், 1919 ஆம் ஆண்டு திருச்சிராப் பள்ளியில் நடைபெற்ற அரசியல் மாநாட்டுக்குத் தலைவராயிருந்தும் நிகழ்ச்சிகளைத் திறம்பட நடத்தினார். இவர் வகித்த பத விசள் பலவாகும் முதலாவது உலகப் போரின் குழுக்களில் உறுப்பினராயிருந்தும் ஐம்பதி னாயிரம் ரூபாய் செலவில் 'இராமநாதபுரம்' என்ற ஆகாயவிமானத்.ை" வழங்கியும் அரசுக்கு உதவிபுரிந்தார். இராசராசேசுவர சேதுபதி தம் முடைய முன்னோர்களின் வாழ்க்கையைப் பின்பற்றிச் சமயத்துக்கும் தமிழுக்கும் அகிய தொண்டாற்றினார். முப்பத்தொன்பது வயது நிரம்பிய இரண்டு மாதங்களுக்குள் 4-8-1928 ஆம் நாள் இவர் மறைந்தார்.

உ. வே. சாமிநாதையர் பாராட்டு

இராசராசேசுவர சேதுபதி தாம் வாழ்ந்த காலத்துப் புலவர் பெருமக் களுடன் அளவளாவித் தமிழ்ச்சுவையை நுகர்ந்தவர். மகாமகோபாத் தியாய உ. வே. சாமிநாதையர் நூல்களில் தமிழின் வளர்ச்சியில் சேதுபதி கொண்டிருந்த அன்பு வெளிப்படுகிறது. சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் ' என்ற தலைப்பில் ஐயர் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத் தில் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் இராசராசேசுவர சேதுபதி பற்றிக் குறிப்பிட்ட பகுதி பின்வருமாறு :

'செந்நெற்குடி சுப்பராயரென்ற ஒருமாத்துவப் பண்டிதர் இருந் தார். அவர் விஷ்ணு புராணத்தைச் செய்யுள் வடிவமாக இயற்றி னார். வெண்பாப்புலி என்ற பட்டம் பெற்ற கவி ஒருவர் இருந்தார். இவர்களும் வேறுபல புலவர்களும் சேதுபதி மன்னர்களாலும் அவர்