பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧΙV இராசராசேசுவர சேதுபதி

களுடைய நாட்டிலுள்ள பிரபுக்களாலும் ஆதரிக்கப்பெற்றவர்கள். இப்பொழுது இங்கே வந்து வீற்றிருக்கும் சேதுபதி அரசரவர்களும் பல வருடங்களாகத் தமிழின் அபிவிருத்திக்குச் செய்து வரும் உதவி மிகப் பாராட்டர் பாலது. ... நான் அறிந்து கொண்ட விசாங் ளை இங்கு எடுத்துச்சொல்லும்படி அவகாசம் கொடுத்த ஸர்வகலாசங்கத் தாருக்கும் தமிழாராய்ச்சி விஷயத்தில் வெகுகாலமாகச் சகாயம் செய்துவரும் சேதுமன்னர்களாகிய மாட்சிமைபொருந்திய மஹா ராஜாபூரி பா. இராசராசேசுவர சேதுபதி மஹாராஜா அவர்களுக்கும் வேண்டியபொழுது எனக்கு எட்டுச்சுவடிகளைக் கொடுத்துப் பேருதவி புரிந்து வந்திருக்கும் திருவாவடுதுறை ஆதீனம் முதலிய ஆதீனங் களின் தலைவர்களுக்கும் பின்னும் உள்ள பற்பல உபக களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியைச் செலுத்துகின்றேன். '"

நூல் வேண்டும் சேதுபதி

மீதுரண் விரும்புவர் சிலர். உண்பதொன்றே மனிதன் கண்ட இன்பம் என்று வாழ்பவர் சிலர். பணம் சேர்ப்பதே வாழ்க்கையின் கோட்பாடு என்றுளர் சிலர். மாடமாளிகை வேண்டும் என்று துடிப்பர் சிலர். விரைந்து செல்லும் உந்துவண்டி வேண்டி உருகுவர் சிலர். நூல் வேண்டும் என்று கேட்பாருளரோ ? என்று வினவுகிறார் சாமிநாதையர். ஆம் என்று சொல்லி விடைகொடுக்கிறார் அப்பெருந்தகை.

பால்வேண்டும் பழம்வேண்டும் பன ம் வேண்டும் பலவுடுப்பு மேல்வேண்டும் கோல்வேண்டும்

விரைசகடம் மிகவேண்டும் ஆல்வேண்டும் எனலன்றி

அரசேநின் போல்தமிழ்த்தொன் நூல்வேண்டும் என அன்பின்

நுவல்பவரைக் கண்டிலமே

| F.

என்று மறைந்த சேது நாட்டின் அரசாட்சியன், சீர்ப்பாற்கரவேள் அருந் தவத்தால் உதித்த பெருமாட்சியுறு புவிராசராச மகிபாலனை விளித்துப் பாடுகிறார் தமிழ்த் தாயின் ஒப்பிலா மணிகளுள் ஒருவரான சாமிநாதச் சான்றோர் .

ஐயரவர்களுக்கு அளித்த உதவி

தினைத்துணை உதவி எவரிடமிருந்து பெற்றாலும் பனைத் துணை யாக் கொண்டு நன்றி தெரிவிக்கும் உள்ளம் படைத்தவர் சாமிநாதையர். தாம் எழுதிய-பதிப்பித்த நூல்களில் தமக்குதவியவரை மறவாது வாழ்த்

_

1. உ. வே. சாமிநாதையர் தமிழ்ப்பாமஞ்சரி (இரண்டாம்பாகம்) சென்னை. 1962.