பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சி. கமலையா

தும் பாங்கு சாமிநாதையர்க்கே உரியது எனலாம். சிலப்பதிகாரப் பதிப்பின் முன்னுரையில் இராசராசேசுவர சேதுபதி பற்றிய பகுதி பின்வருமாறு : -

' நூற்பரிசோதனைக்கு உடனிருந்து உதவி புரிபவர்கள் விஷயத்தில் நான் கவல்ையுறாவண்ணம் பல வருடங்களாக மாத வேதனமளித்து ஆதரித்துவரும் ரீ சேது ஸ்மஸ்தானாதிபதிகளும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தலைவர்களும், சென்னை சட்ட நிரூபண சபை அங்கத்தினர்களுமான கெளரவம் பொருந்திய மகாராஜா ராஜபூரீ பா. இராஜராஜேசுவர சேதுபதி மகாராஜா அவர்களுடைய வள்ளன்மையை ஒருபொழுதும் மறவேன். '

சமஸ்தானம் தந்தவர்

இராசராசேசுவர சேதுபதிக்கும் உ. வே. சாமிநாதையருக்கும் இடையே இனிய நட்பு நிலவியது. அரசரும் புலவரும் உரையாடி மகிழ்வது பண்டைத் தமிழர் மரபன்றோ !

மகா மகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள், சென்னையில் "உட்லண்ட்ஸில் சேதுமன்னராகிய இராசராச சேதுபதியவர்கள் வந்து தங்கும் காலங்களில் அவரைச் சென்று பார்த்து வருவது வழக்கம். இருவரும் நெடுநேரம் உரையாடி இன்புறுவர்ர்கள். ஒருமுறை ஐயரவர் கள் அந்த மாளிகைதுகுச் சென்ற போது அரசர் வெளியில் போயிருந்தார்.

" . . அங்கங்"

ஐயரவாகள அங்கேஅமர்ந்து மன்னரின் வரவுக்காகத் காத்திருந்தார்.

நடுவே வட்ட மேஜையும் மெத்தை தைத்த நாற்காலியும் மற்றொரு பக்கத்தில் சோபாவும் போட்டிருந்தார்கள். அரசர் நாற்காலியில் அமர்ந்து பேசுவார். மற்றவர்கள் சோபாவில் உட்கார்ந்து பேசுவார்கள்.

ஐயரவர்கள் சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தார். நெடுநேரம் கழித்து மன்னர் வந்தார். அப்போது அங்கிருந்த பணியாளர்கள் ஐயரவர் கள் வந்து காத்திருப்பதைச் சொன்னார்கள். இராசராசேசுவர சேதுபதி அரசர் அதைக்கேட்டவுடன் ஐயரவர்கள் இருக்குமிடத்துக்கு வேகமாகச் சென்றார். அவர் அமர்ந்திருந்தசோபாவில் அவருக்கு அருகில் அமர்ந்து விட்டார். இது ஐயரவர்களுக்கு விய ப்பையும் களிப்பையும் உண்டாக்

கியது. அவர் மன்னரைப் பார்த்துப் பேசலானார்.

-- -- - - --------

  • உ. வே. சாமிநாதையர் : சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும், சென்னை 1927.