பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧVΙΙΙ இராசராசேசுவர சேதுபதி

பணிவும் பண்பும்

உயர்ந்தோர்க்கு அணிகலன் பண்பு. பணிவும் சேர்ந்து விட்டாலோ ஒருமாற்று உயர்ந்துவிடுகிறது அவர்தம் சீர்மை,

'எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வந் தகைத்து'

என்பது வள்ளுவர் வாக்கன்றோ ? 'சேதுபதி, தரிசனமே இராமலிங்க என்று தனிப்பாடல் வரி ஒன்று கூறுகிறது. எனினும் பண்பும் பணிவும் குணமும் நிறைந்து விளங்கியவர் இராச சாசேசுவர சேதுபதி என்பதை, அவர் தமிழ் நன்மணியாம் - தமிழர் கண் மணியாம் சாமிநாதையர்க்கு எழுதிய கடிதம் பகரும்.

தெரிசனமா ச் செப்பலாமே

'அரண்மனை, இராமநாதபுரம்,

17–8–21.

மஹா மஹோபாத்தியாய அய்யரவர்கள்

சமூகத்துக்கு, நமஸ்காரம்.

அன்புடனனுப்பிய கடிதமும் கல்யாண சுந்தரமய்யரவர்கள் மூல மனுப்பிய மணிமேகலைப் புத்தகங்களும் கிடைத்தன. என்னை இப் புத்தகங்கள் மூலமாயும் கெளரவித்ததற்கு என்றும் நன்றி பாராட்டும் கடமையுடையேன். தாங்கள் இத்தமிழகத்துக்குச் செய்யும் மஹோ பகாரத்திற்கு என்னால் அடையும் சொற்ப உதவி ஒரு பொருட் டாமோ ? நிற்க, ஆவுடையார் கோவில் தம்பிரானவர்களின் வியோ கம் நியூஸ் பேப்பர் வாயிலாகத் தெரிய மிக்க விசனமடைந்தேன். மிகவும் சமர்த்தர். லெளகிகம் நன்கறிந்தவர். மிக்க அனுபவமும் மடத்தின் சம்ப்ரதாயமும் அறிந்தவர். அவர்கள்போல் பின்னொருவர் இக்காலத்தில் இல்லையென்றே சொல்லலாம். அவர்களை இழந்தது ஆதீனத்திற்கு ஒரு குறைவே. இவ்வருஷம் சங்கத்தின் விழா செப்டம்பர் மீ" 17 வ. மதுரையில் நடைபெறும். கனம் கே. பூரீனிவாச யங்காரவர்கள் அக்கிராசனம் வகிக்க ஒப்புக்கொண்டுள்ளார்கள். தாங்களில்லாது எப்படி அச்சபை நடக்க முடியும் ? நான் அந்தக் கூட்டத்தில் அன்வயிப்பது எப்படி? ஆகவே தாங்கள் அவசியம் வந்து என்னையும் சபையையும் கெளரவிக்க வேண்டுகிறேன். ஆதீன விஷயங்கள் கடவுள் கிருபையால் சீக்கிரம் ஒரு அனுகூலமான முற்று தலடையும். தாங்கள் அங்கிருந்து வருவது எல்லோருக்கும் பெருத்த ஆறுதலாயிருக்கிறது. தாங்கள் அது சம்பந்தமான விஷயாதிகளோடு தமிழ்ப் பாஷைக்கு உழைப்பதையும் விட்டுவிடாதது உலகோர் செய்த