பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧΧ இராசராசேசுவர சேதுபதி

அணிகள் பூண்டு யானையின் மேல் அமர்ந்து வரும் அரசே! எங்கெல்லாம் அலைகள் கரையில் மோதி நீர்த்துளிகளை வாரி இறைக்கின்றனவோ அங்கு அலை நின் புகழோதும்.

இக்கருத்தமைந்த பாடலைக் கொண்டு சென்றவர் காத் திருந்த பொழுதே சேதுபதி ஒரு பாடலெழுதிக் கிருஷ்ணசாமியிடம் சேர்க்குமா : கொடுத்தார்.

உடல்வளர்க்குங் கல்வி உயிர்வளர்க்கு மாறு: திடமாய்ப் பயின்றிட்ட தேர்ச்சி - கடல்சூழித் தாரணியி லேகிருஷ்ண சாமி தனைவியக்குங் காரணமாம் நேரினிலுங் காண்.

மற்றையோர்க்குக் 56ుమ பிழைப்பு.கிருஷ்ணசாமிக்குக் கல்வி ஊன்று கோல். கிருஷ்ணசாமியை வியப்பதற்கு அது ஒரு காரணம். நேரிலும் அதைக் காணலாம். இதுவே பொருள். t

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் என்ற திருக்குறளை நினைவுகூரத் தோன்றுகின்றதல்லவா ?

வஞ்சிமாநகர் ஆய்வுக்கு ஊக்கம் தந்தவர்

மகா வித்துவான் இராகவையங்காரின் ஆரா ய்ச்சி நூல்களுள் 'வஞ்சிமாநகர் T என்பதொன்றாகும். அந்நூலை ஆசிரியர், இராச ாசேசுவர சேதுபதிக்கு உரிமையாக்கினார். மகாவித்துவானின் ஆராய்ச் சித்திறன் சேதுபதியைப் பெரிதும் ஈர்த்தது. திருக்குற்றாலத்திலிருந்து 19 - 7 - 1917வ அன்று கோவிந்தசாமி என்பவருக்கு இராசராசேசுவர சேதுபதி எழுதிய ஆங்கிலக் கடிதத்தின் தமிழாக்கம் பின்வருமாறு :

'இந்த மூன்று நூல்களும் வஞ்சியைப் பற்றிச் சோமசுந்தர பாரதியின் கட்டுரையையும் (முடிவுகள் ஒருபுறமிருக்க) நம்முடைய வித்துவான் ரா , ரா. அவர்களின் புலமைமிக்க கட்டுரையையும்

படித்தேன். அவர்கள் கையாண்ட முறை உவகையூட்டுவதாகும். ( remarkable). அவர்களுடைய தருக்கத்துக்கும் வாதத்துக்கும் அதனுடைய சிறப்பே எதிர்நிற்கமுடியும். என்னுடைய நெஞ்சம் அவர்களைப் பாராட்டுவதில் மூழ்கியுள்ளது. அவர் ஆங்கில அறிவை வளர்த்திருந்தால் மேத்தா, கோகலே, தாதாபாய் என்ற தேசபக்தர் களைப் போன்று இந்நாட்டுக்குத் தொண்டு செய்திருக்க முடியும்.

t T. B. Krishnaswami : A pictorial Tour Through Ramnad.