பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றிலக்கியச் செழுமை

பேராசிரியர் ச. மெய்யப்பன் எம். ஏ. ,

அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

ஒருதுறைக் கோவை நூலை வெளியிடுவதற்கு மணிவாசகர் பதிப் பகம் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் இசைவு தெரிவித்தது. முந்தைய தலை முறையில் சிறந்த புலவராகவும் தலைசிறந்த கவிஞராகவும் விளங்கிய மகா வித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் நுண்மாண் துழை புலத்தால் நல்லதொரு கோவையை நமக்கு அளித்துள்ளார்.

நீண்ட நாட்களாகக் கையெழுத்துப்படியாகவே இருந்ததனை அச்சு உரு ஏற்றித் தமிழ்கூறு நல்லு லகத்திற்கு வழங்க முன்வந்த மணிவாசகர் பதிப்பகத்தைப் பாராட்டுகின்றேன். 50 ஆண்டுக்கு முன்வந்த அரிய தமிழ் நூலை மறுபதிப்புச் செய்த பெருமையுடைய பதிப்பகம் இது. எது நல்லதோ சிறந்ததோ அதை வெளிக்கொணர்வதில் மணிவாசகர் பதிப் பகம் எப்போதும் முன்னிற்கிறது. ஒரு துறை பற்றிய கோவையாதலால்

இதனை ஒரு சாதனையாகக் கருதி வெளியிடுகிறது.

மு. இராகவையங்கார் அவர்களின் ஆழ்வார்கள் காலநிலை' என்ற நூலையும் முன்பு மணிவாசகர் பதிப்பகம் மறுபதிப்புச் செய்தது, இரட்டையர்களாகிய இராகவையங்கார்கள் இருவர் நூல்களையும் பதிப் பிப்பதில் பெருமையடைகிறோம்.

எழுவர் சுமந்த ஈகைச் செந்நுகம் நல்லியக்கோடன் எனும் வள்ளல் ஒருவனால் தாங்கப் பெற்றதாகச் சிறுபாணாற்றுப்படை கூறுவதுபோல், ஆதீனங்களும் திருமடங்களும் பதிப்பித்த சிற்றிலக்கியங்களை இன்று மணிவாசகர் பதிப்பகம் தலையாய பணியாகக் கருதி, மிகுந்த கவனத் துடன் அழகிய செம்பதிப்புக்களாக வெளிக்கொணர்கிறது. 1961 தொடங்கி, சிற்றிலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளுக்கு முதன்மை கொடுத்து