பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧΧVΙ இராசராசேசுவர சேதுபதி

படுத்துத் துயின்றான். ஒய்வுஎடுத்துக்கொண்டான். முத்துராமலிங்கன் இதையெல்லாம் கண்டு அரசிளங்குமாரன் இராமன் அமர்ந்து நடாத்த அவனுக்கொரு தேர் சமைத்துத் தந்தான். செந்தமிழ்ச் சுவை நிரம்பிய பாடலொன்றில் இராகவையங்கார் இலக்கிய விருந்தை நமக்களிக்கிறார்.

சீர்தந்த தாமரைப் பூப்பட்ட போதும் சிவந்துபடும் பார்தந்த பாதம் பரலுறைப் புண்ணவெம் பாலையெல்லா ம் பேர் தந்து புல்லைப் பரப்பிக் கிடந்த பெருந்தகைக்குத் தேர்தந்த வேள் முத்து ராமலிங் கேந்தர செயதுங்கனே.

இராகவையங்கார் பாடிய இரங்கற்பாடல்கள்

இராசராசேசுவர சேதுபதி காலஞ்சென்றது பற்றிய இரங்கற் பாடல்கள் இலக்கியநயத்துடன் இதயங்கனிந்து பாடப்பட்டவையாகும்.

மண்ணியனா டனைத்திலும் வந்தவர்பா வங்கழுவும் புண்ணியநா டெனுஞ்சேதுப் பொருவில தமிழ்த்திருநாடு நண்ணிய நீள் தவமனைய ரா ஜரா சேச்வரனே விண்ணிய னா டாளவு நீ விரும்பினையோ சென்றனையால்.

நீ சென்ற உலகில்,

அமிழ்தலது நீமாந்து மருந்தமிழு மாங்குளதோ ?' என்று வினவுகின்றார் மகா வித்துவான். சேதுபதியின் குணநலனை உலகறியத் தம்பாடல்களில் உரைக்கின்றார். இராசராசேசுவர சேதுபதி இசைச் சுவைஞர் மட்டுமன்றி இசையுடன் பாடவும் வல்லவர்.

பாட்டருமை கண்டுவந்து பாராட்டும் பெருமதிப்பும் கேட்டருமைப் படவிசைக்குங் கிளரினிய குரலமிழ்தும் வேட்டருமைப் படமொழியும் விறல்வாத வென்றியுமிந் நாட்டருமை யாயினவே ராசரா சேச்வரனே.

இராசராசேசுவர சேதுபதி இராமநாதபுரம் மாவட்டக்கழகத் தலைவ0 மிருந்தார். அப்பொழுது,

"புல்லா னிவழிதிருத்திப் புனல் வையை க்குப் பாலமிட்டார். அவர் அரசருள் அறிவர் என்பது சிறப்பன்று. 'பரசிய நல்லறிவருளே அறிவனு என்று இராகவையங்கார் புகழ்கின்றார். கற்பகம் எவருக்கும் தன் கொடையைச் சோதித்து வழங்குவதில்லை. வாரி வழங்கும் மாரியும் பாலையிலும் சோலையிலும் பொ ழிகின்றது. தகுதியைப் பார்ப்பதில்லை புலவர் என்ற பெயர் கொண்டு புல்லரும் திரிவரன்றோ! அவர்தம் திறம் தெரிந்து வழங்கும் சிறப்புடையவர் சேதுபதி. மகாவித்துவன் பாடுகிறார்: