பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சி. கமலைய ΧΧΧVΙΙ

மரந்தெரிந்த கற்பகமும் மதிதெரிந்து வழங்கலிலை திரந்தெரிந்த கருமுகிலுஞ் சிறப்பறிந்து பெய்வதிலை உரந்தெரிந்த புகழுடைய வொருராச ராசநின்போற் றரந்தெரிந்து புலவரையே தலையளிக்க வல்லார்யார்.

பாரோர் உளமுவப்பச் சீராமநாதர் பணியிலும் திருக்குடந்தைக்கோயில் பணியிலும் தமிழ்ச்சங்கப்பெரிய பணியிலும் இராசராசேச்வரன் சே பட்டிருந்ததை மறக்கப்போமோ ? தமிழ்த்தேசத்துக்கு ஒரு சர்வ கலா சாலை. அதுவே மதுரைத் தமிழ்ச்சங்கம். அச்சங்கத்துக்கு ஒரு தலை ை

அவர்தான் இராசராசேசுவர சேதுபதி.

தமிழ்த்தேயச் சருவகலா சாலைய வைத் தலைமை நினக் கமைத்தேயு மிருந்தபடி யகிலவுல கறிந்ததைச் சமைத்தாய்ந்து பாராமற் றணப்பதுதான் முறையாமோ எமைத்தேர்ந்த பெருந்துணையே யிராசராசேச்வரனே.

கற்றார்கள் குழுவோடு கலந்தமர்ந்து களிக்காமல்' 'விண்ணகம் சென்ற வரை எற்றாலு மெமக்கினிய இராசராசேச்சுரனே, என்றும் மகா வித்துவான் பாடுகின்றார்.

தா யலறத் தம்பியழத் தங்கையழச் சிற்றப்பன் கூயலறக் குலமகளிர் குழைந்தலறச் சிறுவருடன் சேயலற நீவானிற் சிறப்பயர்தல் வழக்கன்றால் ஞாயிறலர் குலமுதலே ராசரா சேச்வரனே.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் பாடலை இப்பாடல் நினைவூட்டுகின் றதன்றோ சேதுபதிகளைச் சூரியவமிசத்தினர் என்று சொல்வது மரபு.

இருபத்துநான்கு இரங்கற்பாடல்களில் மகாவித்துவான் தம்மை யாதரித்த புரவலரைப் பொன்றாவண்ணம் பாடல்களில் நிலைநிறுத்தி யுள்ளார்.

பொய்கொண்டு புகுவார்தம் புலை நெஞ்சை யடியகழ்ந்து கைகண்ட நெல்லியினிற் கருத்தெல்லாம் வெளிப்படுத்து மெய்கொண்டு வெல்கின்ற விளையாட்டு மெங்கேயோ செய்கொண்ட வளச்செம்பிச் திருராச ராச மன்னே.

இராசராசேசுவர சேதுபதி மறைவு குறித்து இராகவையங்காள் பாடிய விருத்தமெனும் ஒண்பாக்கள் இருபத்தைந்து. வெண்பா ஒன்று அவர் மறைந்த தினம் பற்றியதாகும்.