பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்சிறப்புப் பாயிரம்

மதன கமத்து வழுவா வகப்பொருள் வாய்த்தலைவி நூதனுணிக் கண்புதைத் தற்றுறை யொன்றின னுாறுகவி முதுநாளிற் சூடிய கோன்ரகு காத முதல்வனைப்போல் இதுங்ாளிற் சூடினன் சீராச ராசா ரேந்திரனே.

மதனாகமம் - காமநூல்; அகப்பொருள் - உள்ளத்தால் உணர்ந்து துய்க்கும் காதலர் வாழ்வுபற்றிய இன்பப்பொருள் : முதுநாள்முன்னாள்; ரகுநாத முதல்வன்-இரகுநாதசேதுபதி, அமிர்தகவிராயரைப் போலவே இந் நூலாசிரியரும் நாணிக் கண்புதைத்தல் துறை ஒன்றில் நானுாறு பாடல் பாடியுள்ளார். இதுநாள் - இந்நாள்; சீராசராச நரேந்திரன் - சீராசராச சேதுபதி; முத்துராமலிங்க சேதுபதி என்றும்

இவருக்கு ஒரு பெயருண்டு. நரேந்திரன்-மக்களின் தலைவன், அரசன்.

அமிர்தகவிராயர், பூமேவு தெய்வத் தளிர்' என்று தொடங்கி யுள்ளது போலவே இவ்வாசிரியரும், பூவுடன் வாழ்புகழ்ச் சீராச ராசன்” என்று நூலைத் தொடங்குதலும் நோக்கத் தகும். “பூவுடன் என்று தொடங்கிய புலவர் பெருமான், பெரும்பாக்கியமே என்று நூலை முற்றுவித்தலும் மகிழ்வுக்குரியதாம். சீராசராசன் அரசாள்வது நன்றாக விருத்தலால் பெரும் பாக்கியம் கிடைப்பது இயல்புதானே.