பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறை க் கோவை 7

வெப்பம் திர மேகமாகப் பொருள் வழங்குகிற மை-மேகம். சிகரி-மலை . வல்லமையாக முன் காட்டி என்னா ம் - வல்லமையுண்டாகப் (போர்க்கு) முன்காட்டி என்ன பயனாம்; அச்சம் மன்னுகையால் - அச்சம் நிலை பெற்றிருத்தலால்; சொல் அமையாத மதன் போரில் நீர் வென்றி சூடரிது - சொல்லால் அமையாத மன்மதயுத்தத்தில் நீர் வெற்றிமாலை சூடுதல் இல்லை என்க. வல் அமை ஆகம் - வல்லாகிய சூது கருவி அமைந்த மார்பு. மச்சம் மன்னு கையால் - மச்சமாகிய (மீன்) கண் களிலே நிலைக்க வைத்த கையுடைமையால். அதாவது கண்களை விட்டுக் கையெடா மையால் என்பதாம் .

8

சேட்கும் வழங்கும் புகழ்ச்சேது காவலன் செந்தமிழ்க்கு நாட்கும் வழங்கும் பெருங்கொடை யானின் ப கண்னுமிசை கேட்கும் வழுதிமன் சீராச ராசன் கிரியனை யீர் வேட்கும் வழுவை வெளியிட் டொளித்தனிர் வேள் குணமே.

சேட்கும் - தூரமான இடங்களிலும், வேறு தேசங்களிலும்; சேது காவலன் - சேது நாட்டு மன்னன்; நாட்கும் - நாள்தோறும், எந்நாளும்; நண்ணும் இசை - பொருந்தும் இசையொலிகளை, இசைப்பாடல்களை: வழுதிமன் - பாண்டியன்; கிரி - மலை. வேட்கும் வழுவை வெளியிட்டுமன்மதனுக்கும் குற்றத்தை வெளிப்படுத்து; வேள் குணமே ஒளித்தனிர்மன்மதனின் குணத்தையே மறைத்தீர். ஒருவருடைய குற்றத்தை வெளிப் படுத்து அவர் குணத்தையே மறைத்தல் நெறியில்லை என்பதாம். வேட்கும் என்றது நீர் மன்மதன் படையாதலால் அப்படைத் தலைவ னாகியவனுக்கும் என்றவாறு. வேட்கும் வழுவை வெளியிட்டுவிரும்பும் யானையாகிய முலையை வெளிப்படுத்தி; வழுவை - யானை: வேள் குணமே ஒளித்தனிர் - மன்மதனுடைய நா னாகிய வண்டை:

அஃதாவது கண்ணை மறைத்தணிர்.

9.

சீர் தந்த தாமரைத் தேவியும் வாணியுஞ் சேர் முன்றிலான் கார்தந்த செங்கைக் கொடைத்திறம் பாடும் கவிப்புலவோர்க் கூர் தந்த சேது பதிராச ராச னுயர்கிரியிர் கீர்தர் த வந்தன நன்றங்கைப் பூவையு கேர்தரினே.