பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 9

11

எருக்குடன் கொன்றை புனேராம நாதனை யேத்திச் செல்வப் பெருக்குடன் வாழ்கின்ற சீராச ராசன் பிறங்கலைப்போற் செருக்குட னின்றாகங் காய்கோ வலேயே தெரியுமெற்குத் திருக்குடக் தைக்கு கெறிவழங் கிற்பயன் றேர்கிலனே.

எருக்கு-வெள்ளெருக்கம்.பூமாலை; கொன்றை-கொன்றைப்பூமாலை; ஏத்தி-துதித்து, புகழ்ந்து, வாழ்த்தி, ராமநாதன்-திரு இராமேச்சுவரத்தில் இராமன் வழிபட்ட பெருமான் இராமநாதன் என்னும் திருப்பெயர் பெற்றார். பிறங்கல் - மலை; செருக்கு - பெருமிதநிலை; நங்காய்பெண்ணே, விளி. கோ வலையே தெரியும் எற்கு - திருக்கோவல் என்னும் திருப்பதியையே தெரியவிரும்பும் எனக்கு; திருக்குடந்தைக்கு நெறி வழங்கின் பயன் தேர்கிலன்-திருக்குடந்தைக்கு வழியைக்கூறின் அதனால் ஆம் பயனைத் தெளிந்திலேன். ஓர் ஊருக்குச் செல்ல விரும்பிய ஒருவ னுக்குப் பிறிதோர் ஊருக்கு வழி காட்டியதனால் பயனில்லை என்பதாம். கோ அலையே கண்ணாகிய அலையினையே; தெரியும் எற்கு - தெரிய விரும்பும் எனக்கு; திருக்குடம் தைக்கும் நெறி வழங்கின்-அழகினை யுடைய முலையாகிய குடங்கள் என் மார்பில் தைக்கும் நெறியாக நீர் தந்தால். பயன்தேர்கிலன் - அதனால் முழுப்பயனையும் தெளிந்திலேன்.

12

மொப்ய2ல் நீர்வையைச் செம்பிகன் டைன் முளரிமலர்த் தையலைப் புண்ணியத் தாற்பெற்ற வேந்தன் றமிழ்க்குங்தி பெய்ய8லச் செய்கின்ற சீராச ராசன் பிறங்கலன்னப் மையலை மாற்றி வருந்தனங் கைக்கே வழங்கலென்னே.

மொய் அலை-நெருக்கமான அலை, திரளான அலை; செம்பிநாடுசேது நாடு. முளரி மலர்த்தையல் - செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள்; நிதி பெய்யல் - நிதிவழங்குதல்; பிறங்கல் - மலை; மையலை மாற்றி - மயக்கத்தைப் போக்கி: மை அலை மாற்றி - கரிய அலையாகிய கண்களை மறைத்து; வருந்தல் நம் கைக்கே வழங்கல் என்னே - வருந்து தலை எம் கைக்கு வழங்குதல் யாது காரணம்; வரும் தனம் கைக்கே வழங்கல் என்னே-வருகின்ற முலைகளை எம்முடைய கைக்கு வழங்குதல் யாது காரணம். வாராமுலை, வருமுலை, வந்தமுலை எனப் பருவ வேறுபாடு குறித்து வழங்கும் மரபில் இத்தலைவி வருமுலையுடைய கன்னிப்பருவத்தளாயினள் என்பது குறித்தவாறாம். -

2