பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

கோவை என்பது கோக்கப்பெற்றது, ஒழுங்குற அமைக்கப் பெற்றது ன்னும் பொருள்படும். எடுத்துக்காட்டாக ஆசாரக் கோவை, மும்மனிைக் காவை வருக்கக் கோவை என்னும் நூற்பெயர்களைச் சுட்டலாம். இவற்றுள் முதலது ஒழுகலாறுகளாகிய ஆசாரங்களை ஒருசேரத் தொகுத்துத் தரப்பெற்ற நூல். மும்மணிக் கோவையோ வெண்பா, கலித் துறை, ஆசிரியம் என்னும் மூவகைப்பாக்களும் மும் மூன்றாய் மாறிமாறி கூ ஏ முப்பது பாடல்கள் கொண்ட சிற்றிலக்கியமாம். அகரமுதலாகிய மொழி முதலாம் எழுத்து வருக்கங்கள் பாடலின் தொடக்கத்தில் வர அமைக்கப்பெறும் இலக்கியவகை வருக்கக் கோவையாம். இக்கோவை கள் எத்தகைய தன்மையன என்பதனைக் கோவை என்பதற்கு அடையாக வரும் சொற்களே புலப்படுத்திவிடுகின்றன. மேலும், இவையெல்லாம் புறப்பொருள் பற்றியவை.

+ -

இனி, அகப்பொருள் பற்றிய கோவை நூல்களும் உள. அவை அடையின்றி, கோவை' என்னும் பெயராலேயே சுட்டப்படும். இது சங்கநூல்கள் முதலிய பண்டைய அகப்பொருள் நூல்களுள் தொடர்பின்றி அமைந்திருந்த அகப்பொருள் துறைகளை நிகழ்ச்சிகள் தொடர்பாக அமையுமாறு கோக்கப் பெற்ற ஒரு புதுநூல் வகையாகும். அகப்பொருட் செய்திகளை முறைப்படக் கூறும் இப்புதுநூல்வகை கோவை' என்னும் சிறப்பும் பெயரால் வழங்கப் பெறுகிறது.

அகப்பொருள் பற்றிய இக் கோவை நூலுக்கு வழிகாட்டும் முதல் நூல் மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார் ஆகும். திருக்கோவை யார் நானூறு கட்டளைக் கலித்துறைப் பாக்களைக் கொண்டதாய் தலைவன் தலைவியர் காட்சி முதலாகக் களவு கற்பென்னும் பாகுபாட்டில் பிரிவு வரையில் அமைந்த கிளவித்துறைகள் நானுறும் கொண்டு அமைந் துள்ளது. இங்ங்னம் அகப்பொருள் தழுவியமையால் அகப்பொருட் கோவை' என்றும் இதனைப் பின் நூல்கள் சுட்டும். குறிஞ்சி, முல்லை. பாலை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைக் கூறுபாடுகளைக் கொண் டிருத்தலால் ஐந்திணைக் கோவை’ என்றும் கூறுவர். நானூறு பாடல் கள் கொண்டதாதலின் நானுற்றுக் கோவை' என்றும் சுட்டப்பெறும்.