பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இராசராச சேதுபதி

21

மும் மலை காடுக் தொழும்ராச ராசன் முகில் வரைவா யெம்மலை கின்ற மன வண் டினிதுன வெய்துகையிற் கைம்மலர் வைத்த பெருங்கண் மறுத்தபின் காரிகையார் செம்மலை யிங்தென்ன கன் முகை யீர்.தென்ன செய்வனவே.

மும்மலை நாடு - மூன்று மலைகளையுடைய நாடு. எம் அலைகின்ற மனவண்டு இனிது உண எய்துகையில் - எம்முடைய திரியும் மனமாகிய வண்டு நன்கு உண்ணும்பொருட்டு வரும் காலத்தில் கைம்மலர் வைத்த பெருங் கள் மறுத்தபின் - கையிடத்துள்ள மலரின்கண் வைக்கப்பட்ட பெரிய கள்ளை சயாமல் மறுத்தபின்; செம்மலை ஈந்தென்ன நன்முகை எந்தென்ன செய்வனவே ; செம்மல் - பழம்பூ நன்முகை - நல்ல அரும்பு : பழம் பூவை ஈந்தும் நல்ல மொட்டினை ஈந்தும் செய்வன யாவை என்றவாறு. பழம் பூவும் முகையும் வண்டுண்ணும் கள்ளுடையன வன்மையால் பயனில்ல்ை என்பதாம். கைம்மலர் வைத்த பெருங்கண் மறுத்தபின் - கையாகிய மலரில் வைத்த பெரிய கண்களை ஈயாமல் மறுத்தபின் . செம்மலை ஈந்தென்ன நன்முகை ஈந்தென்ன செய்வனவே - செவ்விய மலையும் நன்முகையுமாகிய முலைகளை ஈந்து செய்வன யாவை என்ற படி.

22

அல்லன சொல்லித் திரியுங் குறும்பை யறவெறிய வல்லனெ ஞ் சேது பதிராச ராசன் மலயத்திலே நல்லது மான் கனே யாழி யளித்து கலம்புரியா தெல்ல்னி சூடா மணிக்குடம் பட்ட திரும் வியப்பே.

அல்லன - திதானவை; கு று ம் பு - பகைவர், குறுநில மன்னர்

அற எறிய வல்லன் - முற்றிலும் அழிக்க வல்லன் மலயம் - மலை : நல் அதுமான் கணையாழி அளித்து நலம்புரியாது - நல்ல அதுமான் கணையாழியாகிய மோதிரத்தைத் தந்து நலம் செய்யாமல் , எல் அணி சூடாமணிக்கு உடம்பட்டது இரும் வியப்பே - தேவியணிந்த ஒளி பொருந்தப்பெற்ற சூடாமணி தருவதற்கு உடம்பட்டது பெரு வியப்பு. நல் அதுமான் கணை ஆழி அளித்து நலம்புரியாது - நல்ல அதுவாகிய கன்னத்தோடு கூடிய மானும் கணையும் ஆழியுமாகிய கண்களைத் தந்து நலம் செய்யாமலிருக்க. எல் அணி சூடா மணிக் குடம்பட்டது இரும் வியப்பே - ஒளியையுடைய அணிகளைச் சூடாத நீலமணி பதித்த குடமாகிய முலை கிடைத்தது பெரு வியப்பு.