பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இராச ராச சேதுபதி

தரு - கற்பகமரம் , எள்ளிய - இகழ்ந்த எள்ளிய கொடையாவது கற்பகமரம் தருவதினும் மிகக் கொடுப்பவன் என்பதாம். பூபன் - அரசன் , வள்ள்ல் கொடை யாளி ; பிறங்கல் - மலை : ஒருவர் கலை யெல்லாம் கடந்தவரேனும் திருவள்ளுவரையேனும் கொள்ளல் வேண்டு வது. கலையெல்லாம் க ட ந் த வ ைர க் கொண்டு எய்தும் பயன் .திருவள்ளுவரைக் கோடலானே யாகும். போயொருத்தர் - வாய்கேட்க நூலுளவோ மன்னு:தமிழ்ப்புலவராய்க் கேட்க வீற்றிருக்கலாம் என்பது திருவள்ளுவமாலை (16). அங்ங்னமாகவும் மருவு ஒள்ளிய கலையெல் லாம் கடந்தவரை விடுத்து - சாத்திரங்கள் எல்லாம் ஓர் உருவான வரை விட்டு ; திருவள்ளுவரைப் பொருந்தாரை நீர்கொண்டு தேர்ந்தது என்னோ - திருவள்ளுவரைச் சேராரை நீர் கைப்பற்றித் தெளிந்தது யாதோ. திரு வள்ளுவரைப் .ெ ப ா ரு ம் தாரை - அழகு பொருந்திய காது வரையில் சென்று பொருகின்ற கண். வள் - காது ; மருவு ஒள்ளிய கலை எல்லாம் கடந்த வரை விடுத்து - பொருந்திய அழகிய சேலைகள் எல்லாம் நீத்த மலையாகிய முலையை வெளிப்படுத்தி.

2인)

கொக்கங்கை வேலா லிருபிள வாண்ட குமரனேயே மிக்கங்கை யாற்றெழுஞ் சீராச ராசன் வெற்பினல்லா யக்கங்கை வைத்தது தந்திலை தாபத்தை யாற்றலுண்டோ துக்கங்கை வைக்க வெறிதே யளித்தாய் துணைக்குடம்ே.

கொக்கு மாமரம். அங்கை - அழகிய திருக்கை மாமர உருவில் வந்த சூரனை முருகன் தன் வேலால் இருபிளவாகச் செய்தார். குமரன்முருகன் , மிக்கு - அன்பு மிகுந்து வெற்பின் நல்லாய் - மலையிலுள்ள பெண்ணே ; அக் கங்கை வைத்தது தந்திலை - அந்தக் கங்கை நீரை வைத்ததைக் தந்தாயில்லை. தாபம் - வெப்பம், தாகம்; ஆற்றலுண்டோதணிக்கும் வகையுண்டோ. துக்கம் கைவைக்க - துயரம் அடையும் வண்ணம் , துணைக்குடம் வெறிதே அளித்தாய் - இரண்டு குடங்களை ஒன்றும் இன்றி வெறுமனே தந்தாய் ; அக்கம் கைவைத்தது தந்திலை - கைவைத்து மறைத்ததாகிய கண்ணைத் தந்தாயில்லை ; தாபம் - விரக தாபம், காமவேட்கை; துணைக்குடம் வெறிதே அளித்தாய் - ஒன்றை யொன்று துணைகொண்ட முலையினை வீணே தந்தாய். நீருள்ளதைத் தராமல் வெறுங்குடம் தந்தாய் என்பதாம். *