பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இராசராச சேதுபதி

போற்றார் - புகழாதார்; இகழும் இயல்பினர். ஏற்று - எற்றுக் கொண்டு; பொருதார் - போரிட்டவராகிய பகைவர்; போற்ற துதிக்க: கூற்று ஆரும் வாள் - யமன் தங்கிய வாள்; மிளிர் - ஒளிவிடும்; மிளிர் வாள், கூற்று ஆரும் வாள் என்க. மாற்றாரும் ஏத்துற்றவரை இடையே மயங்கவிட்டு - பகைவரும் புகழுற்றவரை நடுவில் மயங்கும்படி நீத்து: வேற்றாரையும் கைவைத்தீர்-அன்னியைரையும் கொண்டீர். உற்றாரைக் கைவிட்டு வேற்ருரைக் கொண்டது ஒழுக்கமதோ என்க. மாற்றாரும் ஏத்துற்ற வரை இடையே மயங்கவிட்டு வேல்தாரையும் கைவைத்தீர்பகைவரும் புகழுற்ற மலையாகிய முலையை மருங்கில் மயங்க வெளி யிட்டு, வேலன்ன் தாரை யாகிய கண்ணையும் கைவைத்தீர் என்க. சால வியப்புடைத்து - மிகவும் ஆச்சரியமாயுள்ளது. -

BB

தருவை கும் வண்மையெல் லாங்கரந் தாங்குக் தயாவுடையோன் கருவைகு மின் குழ விக்கொரு தாயெனக் காசினியாண் டுருவைகு மன் புசெய் சீராச ராச னுயர் கிரியீர்

திருவைகுக் தம் விழைக் தேற்களித் தீர்திருச் செங்குன்றையே .

தகுவைகும் வண்மை - தருக்கண் உள கொடை (31) தயா - கருணை; கரு - கருப்பம்; காசினி ஆண்டு - உலகை அரசாட்சி செய்து : உரு வைகும் அன்பு - மக்களிடத்தெல்லாம் நிலைத்த அன்பு: திரு வைகுந்தம் - ஒரு திருப்பதி; திருச்செங்குன்று - திருச்செங்குன்றுார் என்னும் திருப்பதி; திரு வை குந்தம் - அழகு வைத்த வேலாகிய கண்; விழைந்தேற்கு - விரும்பிய எனக்கு; திருச்செங்குன்று - அழகினையுடைய செம்மலையாகிய முலை .

84

பண் ணு லியலைச் சுவையுறப் பாடிப் படர் செவிக்கு - விண்ணு ரமுதம் பொழிய வலான் விறல் வேந்தர் பிரான் தண்ணுர மார்பனெஞ் சீராச ராசன் சயிலத்துளிர் கண்ணுல மின்றிக் கணவரை கல்லார் கருதலுண்டே.

பண் - இசை, guته ب - இயற்றமிழ்ப்பா, சுவையுற - இன்பம் மிக; அமுதம் - அமுதம் போன்ற இசை, விறல் வேந்தர் - வெற்றிபடைத்த மன்னர் ; பிரான் - தலைவன்; தண் - குளிர்ச்சி; ஆரம் - சந்தனம், முத்து; சயிலத்துளிர் - மலையில் உள்ளவரே. கண்ணாலம் - கலியானம்;