பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இராசராச சேதுபதி

வல்லவரா வர். பந்து அங்கை விட்டவர் - பந்தா கிய முலையினை அழகிய கையால் கொள்ளாது விட்டவர்; மிக்க வண்டு அங்கை அடக் குவர் - மிக்க வண்டாகிய கண்ணினை உள்ளங்கையில் அடக்குவராயினர். அங்கை - அகங்கை, உள்ளங்கை.

41

எம்மகு டாதி பருக்தொழுஞ் சேது வினைப்புரப்போன் றம்மகு டந்தரை தோயப் பணிந்து தரியலர்சூழ் செம்மகு டாதிபன் சீராச ராசன் றிகிரியன் ை யம்மகு டந்தந்த வாறுகன் றங்கோ லதுதரினே.

மகுடாதிபர் - முடிமன்னர்; புரப்போ ன் - காப்பவன்; ம கு ட ம் - சீரிடம்; தறியலர் - பகைவர்; செம் மகுடாதிபன் - அழகிய கிரீடத்தை யுடையவன்; கோலது தரின் - செங்கோலாகிய அதனைத் தந்தால். அம் மகுடம்தந்தவாறு நன்று ஆகும் - அழகிய மகுடம் தந்தவர் றும் நல்ல தாகும். கோலது தரின் - பாணமாகிய கண்ணைத் தந்தால்; அம்ம குடம் தந்தவாறு நன்றாம் - அம்ம நீ குடமாகிய முலையினைத் தந்தவாறும் நன்றாகும்.

42

புற்றிடை வாளர வம்புனே சென்னிப் புகழ்க்கடவுள் பற்றிடை நெஞ்சுகொள் சீராச ராசன் பனிமலைவா புற்றிடை யீடே யிலா தாய்ப் படைக்கை யுடையவர்க்கு

வெற்றிடை மேலிரு வெற்புப் படைத்தல் வியப்பிலேயே.

வாள் அரவம் -- கொடிய பாம்பு; சென்னி - தலை; புற்றிடை... கடவுள் என்றது சிவனை. கடவுட்பற்று - கடவுளிடத்துள்ள அன்பு: இடைநெஞ்சு கொள் - நெஞ்சினிடத்து கொண்டிருக்கின்ற பனி குளிர்ச்சி. இடை - இடம், பூமி, ஈடு - ஒப்பு: படைக்கையுடையவர்க்கு - படைத்தல் தொழிலையுடையவர்க்கு; வெற்றிடைமேல் இரு வெற்புப் படைத்தல் - வெள்ளிடைமேல் இரண்டு மலைகளை ஆக்குதல்; வியப்புஆச்சரியம். படைக் கையுடையவர்க்கு - படையாகிய கண்களையுடைய கையினையுடையவர்க்கு: அதாவது கையால் கண்களை மறைத்திருப் பவர்க்கு; வெற்று இடைமேல் இரு வெற்புப் படைத்தல் - வெறுவிதாகிய இடையின்மேல் இரண்டு மலையா கிய முலையினைப் படைத்தல்.