பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 35

இடங்களிலும் தெரிதல் போல இவன் புகழும் எங்கும் அறியப்பட்டது என்பதாம். வள வரை - வளம்பொருத்திய மலை; கலையர் - குங்கிலியக் கலய நாயனார்; குயவர் - திருநீலகண்டக்குயவர்; காரி - காரிகாயனார்: கூற்றுவன் - கூற்றுவநாயனார்; சத்தி - சத்தி நாயனார். கலை அரை நீத்து - ஆடையை அரையினின்றும் தள்ளி; குயவரை - குசமாகிய மலை; கர்ரி - விடம்; கூற்று - எமன் சத்தி - வேல்; விடமும் கூற்றும் வேலு மாக ஆகிய கண். சத்தி என்பது சத்தியாகிய உமையால் முருகனுக்கு அளிக்கப்பட்ட வேல் என்பதாம். தற்பெயர் நிறுத்திக் கற்பினொடு கொடுத்த வேல் எனவரும் கல்லாட அடி நோக்கத்தக்கது.

Ꮾ5

முட்கரங் கொண்டு பெரும்பகை காட்டை முரணழித்தே யெட் கரங் கொண்டயல் லேரா லுழுதுவித் திச்செருககும் உட்கரங் கொண்ட படைராச ராச னுயர் கிரியிற் புட்கரங் கொண்டு மலையங்கை விட்டதென் பூவையரே.

முட்கரம் - பிடிவாதம்; முரண் - வலிமை; கரம் - கழுதை வித்தி - விதைத்து; கழுதை பூட்டிய ஏரால் உழுது எள்ளை விதைத்து செருக்குக் கொள்ளுதல் வெற்றியுற்ற மன்னரின் செயல்களாம். உட்கரம் - எழுச்சி; புட்கரம் கொண்டு - புட்கர தேசத்தைக் கைப்பற்றி; மலையம் - மல்ைய மலை, பொதியமலை; புள் கரம் கொண்டு - வண்டைக் கைக்கொண்டு; அதாவது வண்டாகிய கண்னை மறைத்து என்றவாறு. மலையம் - மலையமலை; என்றது மலைக்கொப்பம் முலைகளை. * =

ᏀᏮ

துக்கம் தவிர்த்தொளிர் சீராம நாதர் துணையடிக்கு மிக்கன் புளங்கொளுஞ் சீராச ராசமன் வெற்பனையிர் அக்கங்கை வைத்தவர் தோலா ரகலத்த ராடையில்லாத் திக்கம் பரர்கல் லிதழிய ரென்றுமைச் செப்புவனே.

துணையடி - இரு திருவடி, அக் கங்கை ைவ த் த வர் - அந்தக் கங்கையைத் தலைமேல் வைத்தவர்; தோலார், அகலத்தர் - தோலாடை ( யானைத்தோலாடை) போர்த்த திருமார்பினையுடையவர்; ஆடை இலாத் திக்கு அம்பரர் - நிர்வாணமாதலால் திக்கையே ஆடையாகக் கொண்டவர்; நல் இதழியார் - நல்ல கொன்றைமாலையையுடையவர். இவை சிவபெருமானுக்குரிய அங்கவடையாளங்களாகும்; இவை தலை விக்கும் பொருந்தும் வகையில் ஏற்றி உரைக்கலாம். அக்கம் கைவைத்