பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இராசராச சேதுபதி

தவர் - அக்கமாகிய கண்ணைக் ைக யி ல் வைத்தவர்; தோல் ஆர் அகலத்தர் - யானை பொருந்திய மார்பினர்; இங்கே யானை என்றது முலை. ஆடை இலாத் திக்கு அம்பரர் - உடைநெகிழ ஆடையின்றி நின்றனர் என்றவாறு. நல் இதழியர் - நல்ல இதழினை (உதட்டினை )

யுடைய பெண்டிர்.

G7

காளம் விளைத்த களின வயற்செம்பி காடுவைத்த தோளம் பொருப்பினன் சீராச ராசன் ருெடர் மலைவாய் நீளம் படைத்த குழலா யிசைதரு கேரத்திலே தாளம் விடுத்தவர் தம் புரு வங்கை தரித்தென்னேயே,

நாளம் விளைத்த நளின்ம்-தண்டோடு பொருந்திய தாமரை, தோள் அம் பொருப்பினன் - தோளர்கி அழகிய மலையினையுடைய வன்; நீளம் படைத்த குழல் - நெடிய கூந்தல்; இசைதரு நேரத்திலே - பாட்டு உதவும் வேளையிலே, தாளம் விடுத்தவர் - ஒற்றும் தாளத்தைக் கை விட்டவர்; தம்புரு அங்கை தரித்தது - தம்புரு என்னும் சுருதிக் கருவியைக் கையில் கொண்டது. இசைதரு நேரத்திலே - புணர்தரு வேளையிலே, தாளம் விடுத்தவர் - தாளம் போன்ற முலையை வெளிப் படுத்தியவர்; தம் புருவம் கை தரித்தது - தம்முடைய புருவத்தைக் கைபொருந்தியது. கண் மறைப்புழிப் புருவமும் மறைந்தது பற்றிக் கூறியது.

(38

பெரும்பான ரொக்கல் வறியோர் வெறுக்கை பெருந்தமிழோ ரருங்காம தேனு வெனும் ராச ராச னணி வரையிர் பொருந்தாரை நீர்தா மிருட்சிறை வைத்தல் பொருந்துமென்ருே விரும்பாக் தளையுடை யீர்வல் விலங்கெமக் கிட்டதுவே.

பெரும்பாணர் - பெரிய யாழினைவைத்து இசை பாடுதலில் வல்ல இசைகாரர்; ஒக்கல் சுற்றம்; வெறுக்கை - செல்வம்; பெருந் தமிழோர் - சிறந்த தமிழ்ப் புலவர்; காமதேனு - விரும்பியதனைக் கொடுக்கும் தெய்வப்பசு; அணி - அழகு; பொருந்தாரை - பொருந்தாத பகைவரை; இருட்சிறை வைத்தல் - இருண்ட சிறையில் அடைத்து வைத்தல்; இரும்பாந் தளையுடையீர் - இரும்பாகிய தளையினையுடை பீர்; வல் விலங்கு - வலிய கை விலங்கு. பொரும் தாரை - பொருகின்ற வாள், கண்; இருட்சிறை வைத்தல் - வாளாகிய கண்ண்ை இருட்சிறை