பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 47

உலா வும், திரியும். வளவன் முனை - சோழனது போர்க்களம் : மீன் ஒளித்தால் - மீனக் கொடியுடைய பாண்டியன் ஓடி மறைந்தால் ; கூடல் மாண பிற்றன்று - மதுரை மாநகர் பெருமையுடையதாகாது. வள வல் முனை - வளப்பமான சூதுகருவி போன்ற முலை , வளமான வலிய மலை முகடு என்றும் உரைக்கலாம். மலைச் சிகரமும் முலைக்கு ஒப்பாகக்

கூறப்படும் பொருளேயாகும். மீன் ஒளித்தால் - மீன் போன்ற கண்னை மறைத்தால் கூடல்மாண்பிற்று அன்று - கலவி சிறவாது .

91.

திவ?ல யபசர மில்லா விசையைச் செவிமடுத்துத் த.வலயங் காண்பவன் சீராச ராசன் சயிலமன் னிர் குவலய முற்று மடக்கிவைத் தாளிறை கொண்டுகின்று கவலையற் றிர் வெங் குயவரை யெம்பாற் கடி தளித்தே.

திவலை - துளி , சிறிது ; அபசுரம் - மாறான ஓசை; செவிமடுத்து - கேட்டு தவலயம் - மிகுதியும் உள்ள ஈர்ப்புத்தன்மை கருதிலயம் . லயம் காண்டல் - சுருதியொப்புமை பூமி, குவளை, இறை - அரசன், கையிறை, பூமி முழுவதையும் அடக்கிவைத்து ஆளும் அரசரைக் கொண்டமையால் கவலையற்றிருந்தார். வெங்குயவரை - கொடிய மறைவானவரை ; குயவரை - குயச்சாதியரை என்றும் ஆம்: கடிதளித்து - விரைந்து தந்து. குவலயம் முற்றும் அடக்கிவைத்து ஆள் இறை கொண்டு - குவளை மலர் போன்ற கண்ணை முழுவதும் மறைத்து வைக்கின்ற கையுடைய ராய் . வெங்குயவரை - விருப்பந்தரும் முலை யாகிய மலை. அரசரைக் கையில் வைத்து எமக்குக் குயவரைக் கொடுத் தீர்கள்; அன்பில்லை என்றபடி.

92

காருண்டு பூவிற் பொழிந்தும் வற்றத கடல்வளத்தான் பாருண்ட சீர்த்தியன் சீராச ராசன் பருப்பதத் தாய் ஊருண்டு வம்பில்லை மாவுண் டிடையீடிங் கொன்றுமில்லை தேருண்டு பண்டியுண் டம்மா சுகமட்டுக் தேர்ந்திலமே.

கார் - மேகம்; பூவிற் பொழிந்தும் - பூமியில் பெய்தும்; பாருண்ட சீர்த்தியன் - உலகம் முழுவதும தங்கிய பெரும்புகழுடையான். பருப் பதம் - மலை; ஊர் உண்டு - ஊர் உரிமையாயுள்ளது: வம்பு இல்லை - வம்புவழக்கு எதுவும் இல்லை; மா - ஆடு மாடு -குதிர்ை முதலிய விலங்குகள்; இடையீடு - தடை: ஒன்றுமில்லை - சிறிதும் இல்லை;