உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதலால், நான என் பொருளை ஒருவர் முன்னிலையிலும் கொடுத்துச் செல்லவில்லை.

நீதிபதி: ‘ஐயா, நீர் பொருளைக் கொடுத்ததாகச் சொல்லுகிறீர். இவரோ, வாங்கவில்லை என்கிறார். நீர் கொடுத்ததை நிரூபிக்கச் சாட்சியும் இல்லை. நீர் எந்த மரத்தின் அடியில் இருந்து கொண்டு உம் பொருளைக் கொடுத்தீரோ, அந்த மரத்தையாவது இங்கு அழைத்து வாரும்,’ என்று கூறி, ஏதோ சமிக்கை செய்தார்.

உடனே ஜேம்ஸ் வெளியே சென்றான். ஒரு மணி நேரம் கழிந்தது. நீதிபதி பட்லரை நோக்கி, ‘ஜேம்ஸ் திரும்பி வந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்,’ என்றார்.

பட்லர் தன்னை மறந்தவனாய்; ‘ஐயா, அது முடியாது; அம்மரம் நெடுந்தூரத்தில் இருக்கிறது,’ என்றான்.

உடனே நீதிபதி, ‘அடா, துஷ்டா! அம்மரமிருக்கும் இடத்தைத் தெரிந்திருக்கும் நீ, அவரது பொருளை வாங்கவில்லை என்று ஏன் சாதிக்கின்றாய்? உண்மையைக் கூறினால், உயிர் பிழைப்பாய்! அன்றேல், உன்னைச் சிரச்சேதம் செய்து விடுவேன்!' என்று பயமுறுத்தினார்.

குற்றம் பொருந்திய மனமுடைய பட்லர் பயந்து விட்டான். அவன் நீதிபதியின் கால்-

25