களில் வீழ்ந்து அழுதான்; தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். ஜேம்ஸ் தன்னிடம் கொடுத்து வைத்த பொருளை, அவன் மீண்டும் ஜேம்ஸுக்குக் கொடுத்து விட்டான். நீதிபதி, அவனை ஐந்து வருட காலம் கடுங்காவலில் வைத்தார்.
கேள்விகள்:
1. ஜேம்ஸ் என்ற வர்த்தகன் நீதிபதியிடம் தொடுத்த வழக்கு யாது?
2. பட்லர் நீதிபதி கேட்ட போது கூறிய பதில் என்ன?
3. நீதிபதி ஜேம்ஸ் பொருளை எவ்வாறு பட்லரிடம் இருந்து பெற்றார்?
4. ஜேம்ஸ்-பட்லர் பாடத்தால் நீ அறிந்து கொள்ளும் நீதி என்ன?
6. உத்தம சகோதரன்
நெடுஞ்சேரலாதன் என்னும் அரசன் சேர நாட்டை ஆண்டு வந்தான். அவன் செங்கோல் மன்னன். அம்மன்னன் எல்லா அரசர்களையும் வென்று, அரசர்க்கு அரசனாய் விளங்கினன். அவன் மனைவி நற்சோணை என்பவள். அவளுக்கு இரண்டு மைந்தர்கள் இருந்தார்கள். மூத்தவன் பெயர் செங்குட்டுவன்; இளையவன் பெயர் இளங்கோ. அவ்விருவரையும் சேரலாதன் மிகுந்த அன்புடன் வளர்த்து வந்தான்.
26