உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு நாள், அரசன் இரு பிள்ளைகளையும் தனக்கு இரு புறங்களிலும் உட்கார வைத்துத் தான், அவர்களுக்கு மத்தியில் ஓர் ஆசனத்தில் கொலு வீற்றிருந்தான். அப்போது அங்கு ஒரு சோதிடன் வந்து, அரசனைப் பணிந்தான். அவன் இரு சிறுவர்களையும் கூர்ந்து பார்த்தான். பிறகு, அவன் அரசனை நோக்கி, ‘அண்ணலே, இவ்விருவருள் இளைய பிள்ளையே பட்டத்திற்குரிய இலட்சணங்கள் பொருந்தியவன். அவனிடம் நாட்டை ஒப்புவிப்பீர்களானால், நாடு செழித்தோங்கும். மூத்தவனிடம் ராஜ லட்சணங்கள் காணப்படவில்லை,’ என்றான்.

அம்மொழிகளைக் கேட்ட செங்குட்டுவனது முகம் வாடியது. இளங்கோவின் கண்கள் சிவந்தன. அவன் கோபத்தால் பற்களைக் கடித்தான். அவன் சோதிடனைப் பார்த்து, ‘அறிவற்ற சோதிடனே, நீ சிறிதும் யோசிக்காமல், இதைச் சொல்லி விட்டாய். உத்தம அரசர் மரபில் உதித்த நாங்கள், அவ்வாறு முறை தவறிய காரியம் செய்யோம். தசரத மைந்தனாகிய உத்தம பரதன் பட்டமேற்றானா? மூத்தவன் இருக்க, இளையவன் பட்டம் அடையலாமா? சகோதர வாஞ்சையற்ற பாவிகள் அல்லவோ அவ்வாறு செய்வார்கள்? என்னையும் என் உத்தம சகோதரரையும் பகையாக்-

27