கவோ நீ இவ்வார்த்தைகளைச் சொன்னாய்? உனது நாவை இப்போதே அறுத்தெறிவேன்!’ என்று கூறிக் கோபித்தெழுந்தான்.
சேரலாதன் அவனது கோபத்தை அடக்கினான். சோதிடன் மிகவும் பயந்து விட்டான். பின்னர், இளங்கோ சோதிடனை நோக்கி, ‘சோதிடனே, நான் சொல்வதைக் கேள்; என்னிடம் அரசர்க்குரிய உத்தம லட்சணங்கள் இல்லை; துறவிக்கு வேண்டிய லட்சணங்களே உள்ளன. யான் இல்லறத்தை விரும்பவில்லை; துறவறத்தையே பெரிதும் விரும்புகின்றேன். அதுவே யான் மேற்கொள்வது. இது சத்தியம்! சத்தியம்! முக்காலும் சத்தியம்!’ என்றான்.
தன் இளைய புதல்வன் மொழிகளைக் கேட்ட தந்தை, பதைபதைத்துக் கண்களில் நீர் சோர நின்றான். பின்பு, அவன், ‘என் அருமைச் செலவ, முன் பின் யோசியாமல் சத்தியம் செய்து விட்டனையே! நான் என் செய்வேன்!’ என்றான்.
இளங்கோ, ‘அப்பா, யான் ஆய்ந்து பார்த்தே, சத்தியம் செய்தேன். யான் என் தமையனாருடன் இருந்தால், பல துஷ்டர் என்னை அரசனாக்க விரும்புவர். அவர்களோடு சேர்ந்து என் புத்தி மாறினும் மாறும். அப்-
28