போது நான், என் சகோதரர் மனம் நோகுமாறு செய்தவனாவேன். வெள்ளம் வருவதற்குள், அணை போட்டு வைப்பது நல்லதல்லவா? பின் வரக் கூடியவற்றை ஆலோசித்தே, யான் துறவறம் மேற்கொண்டேன். என் தமையனார் இவ்வுலக ஆட்சியைப் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். நீங்கள் வருந்தலாகாது,’ என்று கூறினன்.
இளங்கோவின் மொழிகளைக் கேட்ட தந்தை அவனைக் கட்டித் தழுவினன். பின்பு, அவன், ‘என் அருமைக் குழந்தாய், உன் அறிவை மெச்சினேன்! நீயே உலகில் உத்தம சகோதரன்! உன்னால் நம் மரபு மேம்பட்டது,’ என்று கூறி முத்தமிட்டான்.
இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த செங்குட்டுவன், தன் தம்பியை அணைத்துக் கொண்டான். அவனது மனம் அன்பால் குழைந்தது. அதனால், அவன் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான். ‘என் அருமைத் தம்பீ, என் பொருட்டுத் துறவறம் மேற்கொண்ட செல்வமே, நீயே உத்தம சகோதரன்! நீ என்னை விட்டுச் சென்று விடுவாயானால், யான் உயிர் தரியேன்! உத்தம குண பரதனை ஒத்த நீ, என்னை விட்டுப் பிரியாமல் இருந்து, நாட்டை ஆள வேண்டும். உன்னைத் தம்பியாகப் பெற்ற எனக்குக் குறைவு
29