7. குமணவள்ளல்
முன் காலத்தில் நம் இந்தியாவில் கேட்பாருக்கு இல்லை என்னாமல், கொடுக்கும் பெரியார் பலர் இருந்தனர். அவர்கள் தங்கள் உயிரையே கேட்டாலும், தயங்காமல் கொடுக்க வல்லவர்கள். அவர்களுக்கு வள்ளல்கள் என்பது பெயர். அவ்வள்ளல்களுள் ஒருவன் ‘குமணன்’ என்பவன். அவன் நற்குணங்களுக்கு உறைவிடம் போன்றவன். கொடையில் கன்னனை யொத்தவன்; எக்காலத்தில், யார் வந்து, எதைக் கேட்டாலும், இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் மன வலிமை படைத்தவன். பல தமிழ்ப் புலவர்கள் அவனிடம் சென்று கவி பாடிப் பொருள் பெற்றுச் செல்வார்கள். அவன் கவிவாணர்களைத் தன் உயிர் போல எண்ணி வந்தான்.
இத்தகைய நற்குணக் குன்றுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் இளங்குமணன் என்பது. அவன் கல்வியறிவு இல்லாத மூடன். அவனுக்குப் பல துஷ்ட நண்பர்கள் இருந்தார்கள். அத்துஷ்டர்கள் அவனுக்குப் பல துர்ப்போதனையைச் செய்து வந்தார்கள்; ‘ஐயா, உம் தமையனார் யாவர்க்கும் பொருளை இல்லை என்னாமல் கொடுக்கிறார். கஜானாவில் உள்ள பொருள் அனைத்தையும்
31